ஜூஸ் வியாபாரி டு பில்லியனர்… சிக்கிய மகாதேவ் செயலி உரிமையாளர்

விளையாட்டு

மகாதேவ் கிரிக்கெட் சூதாட்ட செயலி உரிமையாளர் செளரப் சந்திரசேகர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தனது திருமணத்தை ஐக்கிய அரபு எமிரேட்சில் ஆடம்பரமாக நடத்தினார்.

மும்பை மற்றும் நாக்பூரில் இருந்து விருந்தினர்களை அழைத்துச் செல்ல சிறப்பு விமானங்கள் பறந்தன. பாலிவுட் நட்சத்திரங்கள்  ஏராளமானோர் இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர்.

திருமணத்துக்காக செளரப் சந்திரசேகர் 200 கோடி செலவு செய்ததாக சொல்லப்பட்டது. அதோடு , இவர் கிட்டத்தட்ட 5000 கோடி பண மோசடி செய்ததாக  புகார் எழுந்தது.

பல நகரங்களில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து சௌரப் சந்திரசேகர் வெளிநாட்டுக்கு தப்பி விட்டார். துபாயில் அவர் பதுங்கியிருந்தாக கூறப்பட்டது.

இது தொடர்பாக அமலாக்கப்பிரிவு இண்டர்போலுக்கும் தகவல் அளித்தது.  செளரப் சந்திரசேகருக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் வெளியிடப்பட்ட நிலையில், தற்போது அவர்  துபாயில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரை இந்தியாவிற்கு நாடு கடத்த அமீரக  அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக இரு நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சந்தித்து பேசி முடிவு செய்துள்ளனர். செளரப் சந்திரசேகர் அங்கு  வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே, இந்தியாவில் மகாதேவ் உட்பட செளரப் சந்திரசேகருக்கு சொந்தமான கிரிக்கெட் சூதாட்ட செயலிகளை மத்திய அரசு தடை செய்திருக்கிறது. இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சத்தீஷ்கர் போலீசார் இவர் தொடர்பான வழக்கை கையாண்டு வருகின்றனர்.

சத்தீஸ்கர் மாநிலம் பிலாய்  நகரம்தான் இவரின் சொந்த ஊர்.ஜூஸ் வியாபாரியாக வாழ்க்கையை தொடங்கியவர் மகாதேவ். ஆப் வழியாக பில்லியனராக மாறினார். இப்போது, மோசடி பேர்வழியாக பிடிபட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

 காளிதாஸ் ஜெயராமின் வருங்கால மனைவி… யார் அந்த மாடல்?

‘வேட்டையன்’ படத்திற்கு கடம்பூர் ராஜூ எதிர்ப்பு!

 

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *