செஸ் ஒலிம்பாட்டியில் இறுதிச்சுற்று ஆட்டத்தில் உலக செஸ் சாம்பியன் மேக்னஸ் செய்த செயலால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
44வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி, கண்கவர் நிகழ்ச்சிகளுடன் சென்னையில் கடந்த 28ம் தேதி தொடங்கியது. சர்வதேச அளவில் செஸ் வீரர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த போட்டிக்காக 187 நாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் சென்னை வந்தனர்.
போட்டியில் பங்கேற்பதற்காக நார்வேயைச் சேர்ந்த உலக செஸ் சாம்பியன் மேக்னஸ் கார்ல்சன் கடந்த 27ம் தேதி தமிழகம் வந்தடைந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், ”செஸ் ஒலிம்பியாடில் பிரக்ஞானந்தா, குகேஷ் ஆகியோரைக் கொண்ட இந்திய ‘பி’ அணியே ஆபத்தானது.
அவர்கள் மிக வலுவாக உள்ளார்கள் என எண்ணுகிறேன். உண்மையை சொல்ல வேண்டுமானால், இந்திய ஏ அணியை விட இந்திய பி அணியை கண்டே அஞ்சுகிறேன்” என்றார்.

ஆரம்பமே அப்சென்டான மேக்னஸ் கார்ல்சன்
4 முறை உலக செஸ் சாம்பியனான மேக்னஸ் கார்ல்சன், இந்திய அணியைக் கண்டு அஞ்சுவதாக கூறினாலும் அவரது மதிநுட்பம் வாய்ந்த ஆட்டத்தின் மேல் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு எழுந்தது.
ஆனால் செஸ் ஒலிம்பியாட்டில் 29ஆம்தேதி நடந்த முதல் சுற்று ஆட்டத்தில் பங்கேற்கவில்லை. அதற்கு பிறகு அவர் விளையாடிய 9 ஆட்டங்களிலும் பங்கேற்ற கார்ல்சன், 6 வெற்றிகள் மற்றும் 3 டிராக்கள் கண்டுள்ளார்.
இந்நிலையில் போட்டியின் இறுதிச்சுற்று (11வது) ஆட்டம் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. அதில் ஒலிம்பியாட் போட்டியில் நார்வே அணிக்காக கடைசி சுற்றில் விளையாடும்மேக்னஸ் கார்ல்சன் ஆட்டத்தை காண அதிகளவிளான ரசிகர்கள் போட்டி நடைபெறும் அரங்கில் காத்திருந்தனர்.
ஆனால் யாரும் எதிர்பார்க்காத அதிர்ச்சியாக கார்சன் இறுதிச் சுற்று ஆட்டத்தில் பங்கேற்கவில்லை.

இறுதிச்சுற்றில் பங்கேற்றும் பயன் இல்லை!
இதுகுறித்து விசாரித்தபோது, செஸ் ஒலிம்பியாடில் பங்கேற்றுள்ள நார்வே அணி, புள்ளிப்பட்டியலில் 44வது இடத்தில் உள்ளது. மேலும் தனிப்பட்ட வீரர்களுக்கான பதக்கப்பட்டியலில் கார்ல்சன் 4வது இடத்திலும் உள்ளார்.
இதனால் கடைசி சுற்று ஆட்டத்தில் விளையாடினாலும் பதக்கப்பட்டியலில் முன்னேற முடியாது என்பதை அறிந்ததால், அவர் அதில் பங்கேற்கவில்லை என்று தெரியவந்துள்ளது. இதனால் ஒலிம்பியாடில் உலக செஸ் சாம்பியனின் இறுதிச் சுற்று ஆட்டத்தைக் காண வந்திருந்த ஏராளமான ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
அதே வேளையில் ஓபன் மற்றும் மகளிர் பிரிவில் பதக்கம் வெல்லும் முனைப்போடு விளையாடி வரும் இந்திய அணிகள் 11-வது மற்றும் கடைசி சுற்று ஆட்டத்தை எதிர்கொண்டுள்ளன.
கிறிஸ்டோபர் ஜெமா
3 தங்கம் உட்பட 4 பதக்கங்கள்: காமன்வெல்த் தொடரில் சாதித்த தங்க தமிழன்!