பிரக்ஞானந்தாவை கைதட்டிப் பாராட்டிய மேக்னஸ் கார்ல்சன்
ஜூலியஸ் பேர் கோப்பை செஸ் போட்டியில் பிரக்ஞானந்தா ஆட்டத்தை டிரா செய்ததற்கு மேக்னஸ் கார்ல்சன் கை தட்டிப் பாராட்டினார்.
மெல்ட்வாட்டர் சாம்பியன்ஸ் செஸ் டூர் 2022 பருவத்தின் 5-வது போட்டியாக ஜூலியஸ் பேர் கோப்பை செஸ் போட்டி நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா, அர்ஜுன் எரிகைசி, உலக சாம்பியன் மேக்ன்ஸ் கார்ல்சன் உட்பட 16 வீரர்கள் விளையாடுகின்றனர்.
வரும் செப்டம்பர் 25 ஆம் தேதி வரை 8 நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில் ஒவ்வொரு வீரரும் 15 ஆட்டங்களில் விளையாட வேண்டும்.
அதன் பிறகு இறுதிப் போட்டிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு 8 பேர் நாக் அவுட் சுற்றுக்குத் தகுதி பெறுவார்கள்.
முதல் நாள் (செப்டம்பர் 19) நடைபெற்ற போட்டியில் இந்திய செஸ் வீரர் பிரக்ஞானந்தா – இவான்சுக், டுடா, ஜெல்ஃபண்ட் என மூன்று பிரபல வீரர்களை வீழ்த்தினார். எனினும் கடைசி ஆட்டத்தில் கிறிஸ்டோபர் யூவிடம் தோற்றார்.
முதல் நாள் முடிவில் கார்ல்சன் 10 புள்ளிகளுடன் முதல் இடத்திலும் பிரக்ஞானந்தா, இவான்சுக், ஹான்ஸ் நீமன், அர்ஜுன் எரிகைசி ஆகியோர் தலா 9 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் இருந்தார்கள்
2 ஆவது நாள் போட்டி இன்று (செப்டம்பர் 20) அனைவரும் எதிர்பார்த்த உலக சாம்பியன் கார்ல்சனுடனான ஆட்டத்தை 67 ஆவது நகர்தலில் டிரா செய்தார் பிரக்ஞானந்தா.
கடைசி வரை கடுமையாகப் போராடிய பிரக்ஞானந்தாவுக்கு இறுதியில் மேக்னஸ் கார்ல்சன் கைதட்டிப் பாராட்டுகளைத் தெரிவித்தார். இதன் காணொளி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இரண்டாவது நாள் முடிவில் அர்ஜுன் எரிகைசி எட்டாவது சுற்று ஆட்டத்தில் 17 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், பிரக்ஞானந்தா 15 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும் இருக்கிறார்.
மோனிஷா
பிரக்ஞானந்தா அணி ஆபத்தானது: மாக்னஸ் கார்ல்சன் இப்படி சொல்ல காரணம் என்ன?
சுப்புலட்சுமி கணவருக்கு எச்சரிக்கைக் கடிதம்: டி.கே.எஸ். இளங்கோவன் தகவல்!