TNPL FINAL: கோவையா..? நெல்லையா..? கோப்பை யாருக்கு?

விளையாட்டு

இன்று (ஜூலை 12) நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் வென்று டிஎன்பிஎல் சாம்பியன் கோப்பையை கைப்பற்ற  கோவை-நெல்லை அணிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

கடந்த மாதம் 12-ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 7-வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டி தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

மொத்தம் 8 அணிகள் மோதிய நிலையில் லீக் போட்டிகளில் முதல் நான்கு இடத்தை பிடித்த கோவை, திண்டுக்கல், நெல்லை, மதுரை உள்ளிட்ட அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றன.

கடந்த 7-ம் தேதி நடைபெற்ற முதல் குவாலிபையர்  போட்டியில் கோவை கிங்ஸ் அணி 30 ரன் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்சை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

எலிமினேட்டர் போட்டியில் மதுரை அணிக்கு எதிரான வெற்றியைத் தொடர்ந்து,  குவாலிபையர் 2-வில்  திண்டுக்கல் டிராகன்சை வீழ்த்தி முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது நெல்லை ராயல்கிங்ஸ் அணி.

பதிலடி கொடுக்குமா கோவை?

இந்நிலையில் பரபரப்பான இறுதிப்போட்டியில் இதில் ஷாருக்கான் தலைமையிலான கோவை கிங்ஸ் அணி, அருண் கார்த்திக் தலைமையிலான நெல்லை ராயல் கிங்ஸ் அணியை இன்று சந்திக்கிறது.

லீக் போட்டிகளில் வெல்லமுடியாத அணியாக கருதப்பட்ட கோவை அணி, நெல்லை அணியிடம் மட்டுமே தோல்வியை தழுவியுள்ளது.

இந்நிலையில் நடப்பு சாம்பியனான கோவை அணி, லீக் போட்டியில் தோற்றதற்கு பதிலடி கொடுத்து 2வது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது.

உள்ளூர் ரசிகர்களின் ஆதரவு!

அதே வேளையில் லீக்கில் 2 தோல்விகளை மட்டுமே தழுவிய நிலையில் கம்பீரமாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது நெல்லை அணி.

பிளே ஆஃப் சுற்றுகளில் கிடைத்த வெற்றிகள் அணி வீரர்களிடையே பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் உள்ளூர் ரசிகர்களின் ஆதரவும் நெல்லை ராயல் கிங்ஸ் அணிக்கு கூடுதல் பலமாக உள்ளது.

இதனால் நெல்லை அணியும் தனது முதல் டி.என்.பி.எல் கோப்பையை கைப்பற்ற போராடும் என்பதால் இன்று நடைபெறும் இறுதிப்போட்டி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

போட்டியை எங்கு காணலாம்?

திருநெல்வேலியில் உள்ள இந்தியா சிமெண்ட் நிறுவன மைதானத்தில் இரவு 7.15 மணிக்கு போட்டி தொடங்குகிறது.  இந்த  போட்டியானது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழ் மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 3 சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பாகிறது. ஆன்லைனில் இந்த போட்டியை Fancode என்ற ஆப்பிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம்.

கிறிஸ்டோபர் ஜெமா

நடிகர் விஜய்க்கு மீண்டும் அபராதம் விதிப்பு! 

அமெரிக்க விமானங்களைச் சுட்டு வீழ்த்துவோம்: வட கொரியா

 

+1
0
+1
0
+1
0
+1
4
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *