சொந்த மைதானத்தில் ஸ்லோ… ராஜஸ்தானை வீழ்த்திய லக்னோ!

Published On:

| By christopher

ராஜஸ்தான் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஜெய்ப்பூரில் நேற்று(ஏப்ரல் 19) நடைபெற்ற ஐபிஎல் 26வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணியும் மோதின.

டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனால் முதலில் களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணியில் தொடக்க வீரர்களான கே.எல்.ராகுல், கைல் மேயர்ஸ் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 82 ரன்கள் குவித்தனர்.

Lucknow Super Giants won by 10 runs against RR

எனினும் மற்ற வீரர்கள் பெருமளவில் ரன்கள் குவிக்காததால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்கு 154 ரன்கள் எடுத்தது.

பின்னர் 155 ரன்கள் இலக்கை துரத்திய ராஜஸ்தான் அணிக்கு பட்லர்(40) – ஜெய்ஸ்வால்(44) ஜோடி முதல் விக்கெட்டுக்கு 87 ரன்கள் குவித்தனர்.

அடுத்து வந்த கேப்டன் சஞ்சு சாம்சன் 2 ரன்களில் ரன் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். அதன்பிறகு வந்த வீர்களில் யாரும் பெரிய அளவில் ஸ்கோர் செய்யவில்லை.

இதனால் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு ராஜஸ்தான் அணி 144 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி கண்டது. இதன்மூலம் 10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ வெற்றிகண்டது.

தொடக்க ஜோடியை தவிர்த்து இம்பேக்ட் பிளேயரான தேவ்தத் படிக்கல் 26 ரன்கள் மட்டுமே எடுக்க, அவருக்கு துணையாக யாரும் இல்லாததால், இதுவரை தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தி வந்த ராஜஸ்தான் அணி 2வது தோல்வியை சந்தித்துள்ளது.

அதுவும் ஐபிஎல் தொடர் தொடங்கி 20 நாட்களுக்கு பிறகு சொந்த மைதானத்தில் விளையாடிய முதல் போட்டியிலேயே தோல்வியை தழுவியுள்ளது ஆர்.ஆர். ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கிறிஸ்டோபர் ஜெமா

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

தமிழகத்தின் மின் தேவை இந்த ஆண்டு 19,000 மெகாவாட் ஆக உயரும்!