லக்னோ அணியின் பந்துவீச்சாளர் மார்க் உட் நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், குஜராத் அணிகள் இடையே நடைபெற்ற நேற்றைய போட்டியில் 56 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்றது.
இந்தநிலையில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மார்க் உட்டுக்கு குழந்தை பிறந்துள்ளதால் நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகுவதாக அவர் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “எனக்கு மகள் பிறந்துள்ளதால் நான் ஐபிஎல் தொடரிலிருந்து விலகுகிறேன். நிச்சயமாக நான் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் கலந்து கொள்வேன். இதற்காக நான் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நான் விளையாடிய நான்கு போட்டியிலும் அணிக்காக நன்றாக விளையாடி சில விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளேன்.
அணி வீரர்கள் என்னை நன்றாக பார்த்து கொண்டனர். நான் அவர்களை மிகவும் நேசிக்கிறேன். அனைத்து போட்டிகளிலும் அணி வீரர்கள் நன்றாக விளையாட நான் அவர்களை வாழ்த்துகிறேன். இறுதிப்போட்டிக்கு நாம் தகுதி பெற வேண்டும். அது தான் நம் அணியின் இலக்கு. இது மிகவும் கடினமான ஒரு போட்டி. சில போட்டிகளில் நாம் வெற்றி பெறுகிறோம். சிலவற்றில் தோல்வி அடைகிறோம். இருப்பினும் நம் அணி வீரர்கள் கடுமையான பயிற்சி செய்கிறார்கள். நம்பிக்கையுடன் முன்னேறி செல்லுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
பிளஸ் 2 ரிசல்ட்: எந்த மாவட்டம் முதலிடம்?
2018 – இணைந்த கைகள்: விமர்சனம்!