உலகளவில் கடந்த 12 மாதங்களில் அதிக வருமானம் ஈட்டிய டாப் 10 விளையாட்டு வீரர்கள் பட்டியலில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியும் இடம்பிடித்துள்ளார்.
சர்வதேச அளவில் இந்தியா விளையாட்டு வீரர்களின் முகமாக விராட் கோலி வலம் வருகிறார். கடந்த டி20 உலகக்கோப்பையின் போது விராட் கோலியை வைத்தே அமெரிக்காவின் பல்வேறு நகரங்களிலும் விளம்பரங்கள் வெளியிடப்பட்டு வந்தன. இதனால், விராட் கோலி என்ற பெயர் சர்வதேச அளவில் பிராண்டாக பார்க்கப்படுகிறார்.
இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் இந்த செப்டம்பர் மாதம் வரையிலான 12 மாதங்களில் அதிக வருமானம் ஈட்டிய விளையாட்டு வீரர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் முதல் 10 வீரர்களில் விராட் கோலியும் இடம்பிடித்துள்ளார்.
போர்ச்சுகல் கால்பந்து அணியின் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ ரூ.2,081 கோடி வருமானத்துடன் முதலிடத்திலும் உளளனர். ஸ்பெயின் கோல்ஃப் வீரர் ஜான் ராஹிம் ரூ.1,712 கோடி வருமானத்துடன் 2வது இடத்திலும், அர்ஜென்டினா கால்பந்து அணி கேப்டன் லயோனல் மெஸ்ஸி ரூ.1,074 கோடி வருமானத்துடன் 3வது இடத்தில் உள்ளனர்.
கூடைப்பந்து ஜாம்பவான் லெப்ரான் ஜேம்ஸ் ரூ.990 கோடி வருமானத்துடன் 4வது இடத்தில் உள்ளார். நட்சத்திர கால்பந்து வீரர் கிலியன் எம்பாப்பே ரூ.881 கோடி வருமானத்துடன் 5வது இடத்தில் இருக்கிறார். கூடைப்பந்து வீரர் ஜியானிஸ் ரூ.873 கோடி வருமானத்துடன் 6வது இடத்திலும்,பிரேசில் கால்பந்து வீரர் நெய்மர் ரூ. 864 கோடியுடன் 7வது இடத்திலும் உள்ளனர்.
பிரான்ஸ் கால்பந்து வீரர் கரீம் பென்ஜமா ரூ.864 கோடியுடன் 8வது இடத்திலும் உள்ள நிலையில், விராட் கோலி ரூ.847 கோடி வருமானத்துடன் 9வது இடத்தில் உள்ளார்.இந்த பட்டியலில் என்சிஏ சூப்பர்ஸ்டார் ஸ்டீபன் கரி ரூ.831 கோடி வருமானத்துடன் 10வது இடத்தில் உள்ளார்.
பட்டியலில் பெரும்பாலும் கால்பந்து வீரர்கள் கோலோச்சினாலும், முதல் 10 இடங்களுக்கு இடம் பிடித்த ஒரே கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார். விராட் கோலி, சொந்தமாகவே பிஆர் நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார். இந்த நிறுவனம்தான் விராட் கோலியை பெரிய பிராண்டாக மாற்றியுள்ளதாக சொல்லப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
பனையேறும் பால்பாண்டி செய்த பனை ஓலை விநாயகர்!
தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு?