மெஸ்ஸி இணைந்த இண்டர் மியாமி கிளப்: சுவாரசியமான 5 தகவல்கள்!

கால்பந்து உலகின் ஜாம்பவான் மெஸ்ஸி பிஎஸ்ஜி கிளப்பில் இருந்து வெளியேறிய நிலையில் எந்த அணியில் இணையப் போகிறார் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.

ஐரோப்பிய அணியான பார்சிலோனோ கிளப் அல்லது சவுதி அரேபியாவின் அல்-ஹிலால் அணியில் இணைவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் அனைத்து யூகங்களுக்கும் மாறாக அமெரிக்காவின் மேஜர் லீக் சாக்கர் தொடரில் விளையாடி வரும் ’இன்டர் மியாமி’ கிளப்பில் இணைந்துள்ளார் மெஸ்ஸி. இதுகுறித்து இண்டர் மியாமி அணியும் சமூகவலைதளங்களில் வீடியோ வெளியிட்டு மகிழ்ச்சியை வெளிபடுத்தியுள்ளது.

உலகின் தலைசிறந்த வீரராக கருதப்படும் 35 வயதான மெஸ்ஸி, ஐரோப்பிய கிளப் அணிகளை தவிர்த்துள்ளது அவரது ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. அதேவேளையில் இண்டர் மியாமி அணி குறித்தும் தெரிந்துகொள்ளும் ஆர்வமும் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

இந்நிலையில் மெஸ்ஸி புதிதாக இணைந்துள்ள இன்டர் மியாமி கிளப் பற்றிய ஐந்து முக்கியமான சுவாரசிய தகவல்களை இங்கு காணலாம்.

கத்துக்குட்டி கிளப்!

இன்டர் மியாமி கிளப்பின் தலைமையகம் அமெரிக்காவின் புளோரிடாவில் அமைந்துள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த கிளப், 2020ஆம் ஆண்டு நடந்த மேஜர் லீக் சாக்கரில் (MLS) சீசனில் தான் தனது முதல் போட்டியை விளையாடியது.  ஏறக்குறைய அந்த ஆண்டில் ஜாம்பவான் மெஸ்ஸி தனது கால்பந்து வாழ்க்கையில் எண்ணற்ற விருதுகளையும், கோப்பைகளையும் குவித்து வைத்திருந்தார்.

டேவிட் பெக்காம் – இணை உரிமையாளர்!

பாரிஸ் ஜெயிண்ட் ஜெர்மைனின் முன்னாள் வீரரும், கால்பந்து உலகின் முன்னாள் ஜாம்பவனுமான டேவிட் பெக்காம், இன்டர் மியாமி கிளப்பின் இணை உரிமையாளர்களில் ஒருவராக உள்ளார்.

இவர் 2007 -2012 வரை அமெரிக்காவின் லா கேலக்ஸி கிளப்பில் இணைந்து  விளையாடினார். தொடர்ந்து கடந்த 2018 ஆம் இன்டர் மியாமியை நிறுவுவதற்கு உதவிய பெக்காம் கிளப்பின் இணை உரிமையாளராகவும் உருவெடுத்தார்.

Lionel Messi joined American Inter Miami

வெற்றிக்காக ஏங்கும் இண்டர் மியாமி

உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவராக கருதப்பட்ட டேவிட் பெக்காம் மூலம் இண்டர் மியாமி கிளப் கவனத்தை பெற்றுள்ளது. எனினும் கடந்த 3 ஆண்டுகளில் லீக் சுற்றில் இருந்து பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறவே இன்டர் மியாமி தடுமாறி வருகிறது.

குறிப்பாக கடந்த 2021 ஆம் ஆண்டு மேஜர் லீக் சாக்கரில் 20வது இடத்தை பெற்று ரசிகளின் கோபத்திற்கு உள்ளானது. பலரும் இதுகுறித்து கடுமையாக விமர்சித்த நிலையில்,  கொஞ்சம் பொறுமையாக இருக்குமாறு ரசிகர்களிடம் வேண்டினார் டேவிட் பெக்காம்.

இன்று வரை தோல்வியின் முகமாகவே பார்க்கப்படும் அந்த இண்டர் மியாமி அணிக்கு மெஸ்ஸியின் வரவு பெரும் பலம் சேர்க்கும். போட்டிகளில் வெற்றி மட்டுமல்லாது கோப்பையுடன் சீசன்களை முடிக்க அந்த அணி போராடும் என்பதை நம்பலாம்.

Lionel Messi joined American Inter Miami

ஒரு பேர் வச்சது தப்பா?

உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான கால்பந்து ரசிகர்களுக்கு, “இன்டர்” என்ற பெயர் இத்தாலியின் புகழ்பெற்ற இண்டர் மிலன் கிளப்பை நினைவுபடுத்தும்.

இண்டர் மியாமி கிளப் உருவானபோது, அமெரிக்காவில் டிரேட் மார்க் உரிமைகள் தொடர்பாக இந்த இரண்டு இண்டர் அணிகளுக்கு இடையே சட்டரீதியான மோதல் ஏற்பட்டது.

இருவரும் அமெரிக்காவில் தங்களது பெயரின் வணிக பயன்பாட்டிற்கு உரிமை கோரினர்.

ஐந்து வருட வழக்கு விசாரணைக்கு பிறகு, எந்த அணியும் அதன் பெயரை மாற்றிக்கொள்ள அவசியம் இல்லை என்று தீர்ப்பளிக்கப்பட்டது.

Lionel Messi joined American Inter Miami

இளஞ்சிவப்பு நிற ஜெர்சி!

மெஸ்ஸியை இதுவரை நீலம், சிவப்பு, வெள்ளை, கருப்பு நிற ஜெர்சியில் விளையாடி பார்த்திருப்போம். இந்நிலையில் இன்டர் மியாமி அணிக்காக இளஞ்சிவப்பு நிற ஜெர்சியை அணிந்து விளையாட உள்ளார் மெஸ்ஸி.

இந்த நிறம் “தென் புளோரிடாவின் துடிப்பான ஆன்மாவை” பிரதிபலிப்பதாக அந்த கிளப் நிர்வாகம் கூறுகிறது.

மேலும் புளோரிடாவின் அடையாளமாக பார்க்கப்படும் ஃபிளமிங்கோ பறவையும் ஜெர்சியில் வடிவமைக்கப்பட்டுள்ள லோகோவில் இடம்பெற்றுள்ளது.

Lionel Messi joined American Inter Miami

ஜாம்பவான் பயணத்தை தொடரும் மெஸ்ஸி

இண்டர் மியாமி கிளப்பில் ஏற்கெனவே மற்றொரு அர்ஜென்டினா ஜாம்பவானும், ஜுவென்டஸ் ஸ்ட்ரைக்கருமான கோன்சாலோ ஹிகுவைன் விளையாடி உள்ளார்.

இந்நிலையில் அதே அர்ஜெண்டினா அணியின் பெருமைமிக்க வீரராக மெஸ்ஸியும் தற்போது இண்டர் மியாமி கிளப்பில் தனது பயணத்தை தொடர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்மூலம் ஐரோப்பாவில் இதுவரை கோலோச்சிய மெஸ்ஸி, இனி அமெரிக்காவிலும் தனது கால்களின் மூலம் ஆதிக்கத்தை நிலைநாட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

ஏற்கெனவே பல உலக சாதனைகளுக்கு சொந்தக்காரரான மெஸ்ஸி, இண்டர் மியாமி கிளப்பில் காலடி எடுத்து வைப்பதன் மூலம் எந்தவித நெருக்கடியும் இன்றி மேலும் பல சாதனைகள் செய்வார் என்பதை உறுதியாக நம்பலாம்.

கிறிஸ்டோபர் ஜெமா

கத்துக்குட்டி கிளப்பில் இணைந்தார் கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி

ஸ்டான்லி மற்றும் தருமபுரி மருத்துவக் கல்லூரிகள் மீண்டும் இயங்க அனுமதி!

மாநில வாரியாக கூட்டணி: திருமாவளவன் அழைப்பு!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts