2022ம் ஆண்டின் சிறந்த கால்பந்து வீரருக்கான பிஃபா விருதை வென்று அர்ஜென்டினா வீரர் மெஸ்ஸி பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற பிஃபா கால்பந்து உலக கோப்பையில் லியோனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி சாம்பியன் பட்டம் வென்று சரித்திரம் படைத்தது.
நடப்பு சாம்பியன் பிரான்ஸ் அணிக்கு எதிராக பரபரப்பாக நடைபெற்ற இறுதிப்போட்டியின் ஆட்ட நேர முடிவில் 3 -3 என்ற கணக்கில் டிரா ஆனது.
அதன்பின்னர் நடந்த பெனால்டி ஷூட் -அவுட் முறையில் 4 -2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அர்ஜென்டினா அணி உலகக்கோப்பை கால்பந்து சாம்பியன் பட்டத்தை பெற்று வரலாற்று சாதனைப் படைத்தது.
இந்நிலையில் சர்வதேச கால்பந்து சங்க கூட்டமைப்பு (பிஃபா) சிறப்பாக செயல்படும் கால்பந்து வீரர்களுக்கு, ஆண்டுதோறும் சிறந்த வீரருக்கான விருது வழங்கி வருகிறது.
அதன்படி பிரான்ஸ் தலைநகர் பிரான்ஸில் நடைபெற்ற பிஃபா கால்பந்து விருதுகள் வழங்கும் விழா இந்திய நேரப்படி இன்று அதிகாலை நடைபெற்றது.
இதில் உலகக்கோப்பையை வென்றதுடன் மாபெரும் சாதனை படைத்த மெஸ்ஸி 2022 ஆம் ஆண்டுக்கான பிபாவின் சிறந்த கால்பந்து வீரர் என்ற விருதை பெற்றார்.
கடந்த 14 ஆண்டுகளில் ஏழாவது முறையாக 35 வயதான மெஸ்ஸி இந்த விருதை பெற்றார்.
பிபா சிறந்த வீரருக்கான வாக்கெடுப்பில், மெஸ்ஸி 52 புள்ளிகளையும், எம்பாபே 44 மற்றும் பென்சமா 34 புள்ளிகளையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இதுமட்டுமின்றி 16 வது முறையாக பிஃபா ஆண்கள் உலகின் சிறந்த லெவன் அணியில் இடம்பிடித்த மெஸ்ஸி, ரொனால்டோவின் சாதனையை (15) முறியடித்துள்ளார்.
சிறந்த கால்பந்து வீராங்கனை விருதை தொடர்ந்து 2 வது ஆண்டாக ஸ்பெயினின் அலெக்ஸியா புடெல்லாஸ் தக்கவைத்துக் கொண்டார்.
தனது அணியை உலகக்கோப்பை பட்டத்திற்கு அழைத்துச் சென்ற அர்ஜென்டினா பயிற்சியாளர் லியோனல் ஸ்கலோனி ஆண்டின் சிறந்த பிஃபா ஆடவர் பயிற்சியாளர் விருது பெற்றார்.
பெண்கள் ஐரோப்பிய சாம்பியன்ஷிப்பில் பட்டம் வெல்ல அழைத்துச் சென்ற இங்கிலாந்தின் சரீனா வீக்மேனுக்கு சிறந்த பெண்கள் பயிற்சியாளர் விருது கிடைத்தது.
சிறந்த கோல்கீப்பர் விருதினை ஆண்கள் பிரிவில் அர்ஜென்டினாவின் எமிலியானோ மார்டினெஸும், பெண்கள் பிரிவில் இங்கிலாந்தின் மேரி ஏர்ப்ஸும் வென்றனர்.
சிறந்த ரசிகர்கள் கொண்ட அணி விருதினை அர்ஜென்டினா வென்றுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
அதிதி ராவுடன் ‘டம் டம்’ ஆடிய சித்தார்த்… விரைவில் டும் டும்?
வீராணம் ஏரியில் மிதமிஞ்சிய உலோக மாசு: ஆய்வில் அதிர்ச்சி!
தேர்வுக்கு நோ டென்ஷன்: மாணவர்கள் முதல்ல இத படிங்க!