ஒரே அணிக்காக விளையாடிய தந்தை, மகன்… என்.பி.ஏ.வில் லெப்ரான் சாதனை!

Published On:

| By Kumaresan M

அமெரிக்க கூடைப்பது லீக்கில் லாஸ் ஏஞ்சல்ஸ் லேக்கர் அணிக்காக நீண்ட காலமாக லெப்ரான் ஜேம்ஸ் விளையாடி வருகிறார். நேற்று (அக்டோபர் 22) என்.பி.ஏ.வில் மின்னிசோட்டா டிம்பர்வுல்வ்ஸ் அணியுடன் லாஸ் ஏஞ்சல்ஸ் லேக்கர்ஸ் அணி மோதியது. இந்த போட்டியில் இரண்டாவது குவார்ட்டர் பகுதி ஆட்டத்தில் லெப்ரான் ஜேம்சின் 20 வயது மகனாக ப்ருனே ஜேம்ஸ் களம் இறங்கினார். அப்போது, அங்கு கூடியிருந்த ரசிகர்கள் ஆரவாரமாக கோஷமிட்டனர்.

இதன் மூலம், என்.பி.ஏ வரலாற்றில் ஒரே அணிக்காக முதன் முதலாக விளையாடிய தந்தை , மகன் என்ற பெருமையை லெப்ரானும் ப்ருனேவும் பெற்றனர். தந்தையும் மகனும் இணைந்து விளையாடிய இந்த போட்டியில் லாஸ் ஏஞ்சல்ஸ் லேக்கர்ஸ் அணி 110 புள்ளிகள் பெற்று வெற்றி பெற்றது.

தந்தையும் மகனும் சேர்ந்து களத்தில் நிற்பதை கண்ட லெப்ரானின் மனைவி ஷாவானா ஜேம்ஸ் கலங்கிய கண்களுடன் பார்த்தார். தற்போது லெப்ரான் என்.பி.ஏ.வில் 22வது சீசனில் விளையாடி வருகிறார். இப்போது,  39 வயதான லெப்ரான் ஜேம்ஸ் விரைவில் தன் ஓய்வை அறிவிக்க வாய்ப்புள்ளது. ஏற்கனவே,  என்.பி.ஏவில்  அதிக புள்ளிகள் குவித்த வீரர் என்ற பெருமையும் லெப்ரான் ஜேம்சுக்கு உண்டு.

என்.பி.ஏ தவிர ஏற்கனவே மேஜர் லீக் பேஸ்பால் போட்டியில் கடந்த 1990 ஆம் ஆண்டு தந்தையும் மகனும் ஒரே அணிக்காக சேர்ந்து விளையாடிதும் உண்டு. 1990 ஆம் ஆண்டு சீட்டில் மரைனர் அணியில் கென் கிராஃபே சீனியர், கென் கிராஃபே ஜூனியர் என தந்தை , மகன்  விளையாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

சென்னை பெண்களுக்காக ‘பிங்க் ஆட்டோ’ : யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

காமன்வெல்த் போட்டியில் ஹாக்கி நீக்கம்… பின்னணி என்ன?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share