’’Laureus’’ விருது மெஸ்ஸிக்குத்தான் சேரவேண்டும்”: அதே விருதுக்கு தகுதி பெற்ற நடால்…ரசிகர்கள் நெகிழ்ச்சி!

விளையாட்டு

Laureus உலக விளையாட்டாளர் விருது மெஸ்ஸிக்குத்தான் சேரவேண்டும் என்று அதே விருதுக்கு தகுதி பெற்ற ரஃபேல் நடால் கூறியிருப்பது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.

உலகப்புகழ் பெற்ற டென்னிஸ் வீரர் ரஃபேல் நடால் , கால்பந்து வீரர்கள் லியோனல் மெஸ்ஸி மற்றும் கிளியன் எம்பாபே, அமெரிக்க நாட்டைச்சேர்ந்த கூடைப்பந்து வீரர் ஸ்டீஃபன் கரி ,நெதர்லாந்து நாட்டைச்சேர்ந்த மோட்டார் பந்தய வீரர் மேக்ஸ் வெர்ஸ்ட்டாப்பென் , ஓட்டப்பந்தய வீரர் மோண்டோ டுப்லான்ட்டிஸ் ஆகியோர் இவ்வாண்டின் ’’Laureus’’ உலக விளையாட்டாளர் விருதுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

இந்நிலையில், ’’Laureus’’ விருதுக்கு தகுதி பெற்ற கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸியும் , டென்னிஸ் வீரர் ரஃபேல் நடாலும் சமூக வலைதளங்களில் பாராட்டுகளை பகிர்ந்து கொண்டனர்.

இது தொடர்பாக , ரஃபேல் நடால் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் கடந்த பிப்ரவரி 21ஆம்தேதி ஒரு ஸ்டோரியை பகிர்ந்திருந்தார். அதில்,

“இந்த விருதுக்காக நியமிக்கப்பட்டதில் பெரும் மகிழ்ச்சி. ஆனால் இவ்வாண்டின் விருது மெஸ்ஸிக்குத்தான் சேரவேண்டும்,” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், அவருடை இன்ஸ்டாகிராம் ஸ்டோரிக்கு பதிலளித்துள்ள மெஸ்ஸி, “உங்களைப் போன்ற சிறந்த விளையாட்டாளர் இதைக் கூறியதில் வாயடைத்துப்போனேன். நீங்களும் பட்டியலில் உள்ள மற்ற அனைவருமே விருதுக்கு உரியவர்கள்தான்’ என்று கூறியுள்ளார்.

உலகப்புகழ் பெற்ற இவர்கள் இருவரும் மாறி, மாறி பாராட்டிக்கொண்டது டென்னிஸ் மற்றும் கால்பந்து ரசிகர்கள் மட்டுமின்றி விளையாட்டை நேசிக்கும் அனைவரிடமும் நெகிழ்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.

வீரர்களின் பதிவுக்கு கருத்து தெரிவித்துள்ள ரசிகர்ஒருவர்,“ டென்னிஸ் மற்றும் கால்பந்து விளையாட்டுகள் வேறு வேறு ஆனால் வீரர்களின் மனது ஒன்றுதான்…அது அன்பு” என்று கூறியுள்ளார்.

மற்றொரு ரசிகர், “உலகின் தலை சிறந்த வீரர்கள் இருவரும் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளனர். இவர்கள் மீது உள்ள அன்பு எப்போதும் குறையாது’ என்று கூறியுள்ளார். இந்த கமெண்டுகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

நீட் விலக்கு: தமிழக அரசின் புதிய மனு மீது விரைவில் விசாரணை

லவ் டுடே: இந்தியிலும் ஏஜிஎஸ் தயாரிக்கிறதா?

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *