கடைசி டி20 போட்டி:இந்திய அணிக்கு 228 ரன்கள் இலக்கு

விளையாட்டு

தென்னாப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் இரு ஆட்டங்களில் தோல்வி அடைந்து தென்னாப்பிரிக்க அணி ஏற்கனவே தொடரை இழந்து விட்டது.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையேயான 3 வது மற்றும் கடைசி டி20 போட்டி மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் இன்று (அக்டோபர் 4 ) நடைபெற்று வருகிறது.

டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி களம் இறங்கி விளையாடிய தென்னாப்பிரிக்கா அணி வீரர்கள் அதிரடியாக ஆடினர். தொடக்க வீரர் குயின்டன் டி காக் 42 பந்துகளில் 4 சிக்சர்கள் உள்பட 68 ரன்கள் அடித்தார். கேப்டன் பாவுமா 3 ரன்னுடன் ஆட்டத்தைவிட்டு வெளியேறி ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தார்.

மற்றொரு வீரர் ரிலீ ரோசோவ் 48 பந்துகளில் சதம் அடித்தார். இதில் 8 சிக்சர்கள் மற்றும் 7 பவுண்டர்கள் அடங்கும். மற்றொரு வீரர் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 23 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். பின்னர் களம் இறங்கிய டேவிட் மில்லர் ஹாட்ரிக் சிக்சர்கள் அடித்தார். இறுதியில் தென்னாப்பிரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 227 ரன்கள் குவித்தது.இந்திய அணியின் தரப்பில் உமேஷ், தீபக் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து 228 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடி வருகிறது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

ஜெயம் ரவிக்கு போன் போட்ட ரஜினி: ஏன் தெரியுமா ?

டி20 உலகக் கோப்பை: மெளனத்தைக் கலைத்த பும்ரா!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *