தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்திய வீரர் லக்ஷயா சென் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
மே 30 ஆம் தேதி தொடங்கிய தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற 2வது சுற்றுப் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் விளையாடிய இந்திய வீரர்கள் லக்ஷயா சென் மற்றும் கிரண் ஜார்ஜ் காலிறுதிக்கு முன்னேறினர்.
தொடர்ந்து இன்று (ஜூன் 2) காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்றது. இதில் பிரஞ்ச் நாட்டு வீரர் டோமா ஜூனியரை எதிர்கொண்ட இந்திய வீரர் கிரண் ஜார்ஜ் 16-21, 17-21 என்ற கணக்கில் தோல்வியடைந்து தொடரை விட்டு வெளியேறினார்.
ஆடவர் ஒற்றையர் பிரிவில் விளையாடிய மற்றொரு வீரர் லக்ஷயா சென் மலேசிய வீரர் லியாங் ஜுன் ஹோவை எதிர்கொண்டார். 41 நிமிடங்கள் நீடித்த இந்த போட்டியில் லக்ஷயா சென் 21-19, 21-11 என்ற கணக்கில் மலேசிய வீரரை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.
தாய்லாந்து ஓபன் தொடரின் அரையிறுதி போட்டிகள் நாளை நடைபெற உள்ளது.
மோனிஷா
கோடை விடுமுறை நிறைவு: 2,200 சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு!
கோகுல்ராஜ் ஆணவக் கொலை: யுவராஜ் தண்டனையை உறுதிசெய்த உயர்நீதிமன்றம்!