தாய்லாந்து ஓபன்: காலிறுதிக்கு முன்னேறிய இந்திய வீரர்கள்
தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர் ஆடவர் ஒற்றையர் பிரிவில் லக்ஷயா சென் மற்றும் கிரண் ஜார்ஜ் காலிறுதிக்குத் முன்னேறியுள்ளனர்.
தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர் மே 30 அன்று தொடங்கி ஜூன் 4 வரை நடைபெற உள்ளது. நேற்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டத்தில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் சாய்னா, அஷ்மிதா ஆடவர் ஒற்றையர் பிரிவில் லக்ஷயா சென், கிரண் ஜார்ஜ், ஆடவர் இரட்டையர் பிரிவில் சாத்விக் சாய்ராஜ் மற்றும் சிராக் ஷெட்டி ஆகியோர் வெற்றி பெற்று 2வது சுற்றுக்குத் தகுதி பெற்றனர்.
இதனையடுத்து இன்று (ஜூன் 1) 2வது சுற்றுப் போட்டிகள் நடைபெற்றது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் உலக பேட்மிண்டன் தரவரிசையில் 26வது இடத்தில் இருக்கும் சீன வீரர் வெங் ஹாங் யாங் மற்றும் 59வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் கிரண் ஜார்ஜ் மோதினர்.
கிரண் ஜார்ஜ் 21-11, 21-19 என்ற செட் கணக்கில் வெங் ஹாங் யாங்கை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
தொடர்ந்து தரவரிசை பட்டியலில் 12வது இடத்தில் இருக்கும் சீன வீரர் லி ஷிஃபெங்க் மற்றும் 23வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் லக்ஷயா சென் மோதினர்.
லக்ஷயா சென் 21-17, 21-15என்ற கணக்கில் லி ஷிஃபெங்கை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் விளையாடிய சாய்னா 11-21, 14-21 என்ற கணக்கில் சீன வீராங்கனை ஹி பிங் ஜியோவிடம் தோற்று தொடரை விட்டு வெளியேறினார்.
மேலும், அஷ்மிதா 18-21, 13-21என்ற கணக்கில் ஸ்பெயின் நாடு வீராங்கனை கரோலினாவிடம் தோற்றார்.
ஆடவர் இரட்டையர் பிரிவில் சாத்விக் சாய்ராஜ் மற்றும் சிராக் ஷெட்டி 11-21, 17-21 என்ற கணக்கில் இந்தோனேஷியா வீரர்கள் பகாஸ் மௌலானா மற்றும் முஹம்மது ஷோஹிபுல்லிடம் தோற்று தாய்லாந்து ஒபன் பேட்மிண்டன் தொடரை விட்டு வெளியேறினர்.
தொடர்ந்து நாளை (ஜூன் 2) காலிறுதிப் போட்டிகள் நடைபெற உள்ளது.
மோனிஷா
அவசர சட்டத்தை வீழ்த்தினால் 2024க்கு முன்னோட்டம்: ஸ்டாலினை சந்தித்த அரவிந்த் கெஜ்ரிவால்
திமுக நிச்சயம் எதிர்க்கும் : கெஜ்ரிவாலுக்கு ஸ்டாலின் ஆதரவு!