கனடா ஓபன் பேட்மிண்டன் தொடர் ஆடவர் ஒற்றையர் பிரிவில் லக்ஷயா சென் சாம்பியன் பட்டம் வென்றார்.
கனடா பேட்மிண்டன் தொடரில் உலக தரவரிசையில் 19வது இடத்தில் உள்ள லக்ஷயா சென் 11வது இடத்தில் உள்ள ஜப்பானை சேர்ந்த நிஷிமோட்டோவை 21-17, 21-14 என்ற நேர் செட்களில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். கடந்த ஓராண்டில் லக்ஷயா சென் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய பேட்மிண்டன் தொடர் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து இன்று (ஜூலை 10) நடைபெற்ற இறுதிப் போட்டியில் நடப்பாண்டு ஆல் இங்கிலாந்து ஓபன் தொடரின் சாம்பியனான சீனாவை சேர்ந்த லி ஷிஃபெங்கை எதிர்கொண்டார்.
மொத்தம் 50 நிமிடங்கள் நீடித்த இறுதிப்போட்டியில் மிகவும் சிறப்பாக விளையாடிய லக்ஷயா சென் 21-18 என்று முதல் செட்டை தன்வசப்படுத்தினார். தொடர்ந்து பரபரப்பாக நடைபெற்ற போட்டியில் 22-20 என்ற கணக்கில் இரண்டாவது செட்டையும் வென்று சாம்பியன் பட்டத்தை தட்டி தூக்கினார்.
பேட்மிண்டன் உலக கூட்டமைப்பு சார்பில் நடத்தப்படும் தொடரை, லக்ஷயா சென் வெல்வது இது இரண்டாவது முறையாகும். முன்னதாக கடந்த ஆண்டு உள்நாட்டில் நடைபெற்ற இந்தியா ஓபன் தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மோனிஷா
‘ஒன்று வாங்கினால் இன்னொன்று இலவசம்’: பிரியாணி கடைக்குப் பூட்டு!
விழுமியங்கள் உருவாக்குவதே சட்டமும், நீதியும்: மக்களாட்சியின் அடித்தளத்தை அழிக்கலாமா?