56 ஆண்டுகளுக்கு பிறகு சாதனை! மெஸ்ஸியை ஓரங்கட்டிய எம்பாபே !

Published On:

| By Jegadeesh

2022 ஆம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடருக்கான தங்க காலணி விருதை பிரான்ஸ் வீரர் எம்பாபே வென்றுள்ளார்.

ரசிகர்களின் கரஓசைகளுக்கு இடையே உலக கோப்பை கால்பந்து போட்டி நேற்றுடன் (டிசம்பர் 18 ) நிறைவு பெற்றது.

அர்ஜென்டினா அணியும் பிரான்ஸ் அணியும் பரபரப்பாக மோதிய இந்த ஆட்டத்தில் வென்றது என்னவோ அர்ஜென்டினா அணி தான்,

ஆனால் இந்த போட்டியின் முக்கிய சாதனையாக கருதப்படும் தங்க காலணி விருதை பெறப்போவது அர்ஜென்டினா அணியின் நட்சத்திரவீரர் மெஸ்ஸியா இல்லை பிரான்ஸ் அணியின் நட்சத்திர வீரர் 23 வயதே ஆன எம்பாபேவா,

என்ற கேள்வி ஆட்டம் தொடங்கிய அடுத்த நொடியில் இருந்தே தொடங்கிற்று.

இறுதிப் போட்டியில் ஆட்டத்தின் பெரும்பாலான பகுதியில் அர்ஜென்டினா அணியே ஆதிக்கம் செலுத்தியது.

ஒரு கட்டத்தில் அர்ஜென்டினா அணி 2 கோல்கள் அடித்து, இனி என்ன நடக்க போகிறது என்ற மெத்தன ஆட்டத்தை கடைபிடித்தது.

அப்போது தான் கெலியான் எம்பாப்பே தனது திறமையை காட்டினார்.

போட்டியின் 79 வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை கோலாக மாற்றி பிரான்ஸ் கோல் கணக்கை எம்பாபே தொடங்கினார்.

இதனை தொடர்ந்து அர்ஜென்டினா வீரர்கள் கண் இமைக்கும் நேரத்தில் 81 வது நிமிடத்தில் எம்பாபே 2-வது கோல் அடித்து, அர்ஜென்டினாவின் ஸ்கோரை சமன் செய்தார்.

Kylian Mbappe wins World Cup Golden Boot award beating Messi

இதே போன்று மெஸ்ஸி கோலால் ஆட்டத்தின் கூடுதல் நேரத்தில் அர்ஜென்டினா கோல் மூன்றானது. எனினும் கெலியான் எம்பாபே போட்டியின் 118 வது நிமிடத்தில் 3 வது கோலை அடித்து ஹாட்ரிக் சாதனை படைத்தார்.

இதன் மூலம் 1966 ஆம் ஆண்டுக்கு பிறகு, உலககோப்பை இறுதி போட்டியில் ஹாட்ரிட் கோல் அடித்த வீரர் என்ற சாதனையை எம்பாப்பே படைத்தார்.

இதனைத் தொடர்ந்து நடப்பு உலககோப்பையில் மொத்தமாக 8 கோல்கள் அடித்து, அதிக கோல் அடித்த வீரர்களுக்காக வழங்கப்படும் ’கோல்டன் ஷூ’ விருதை கெலியான் எம்பாப்பே வென்றார். இதனையடுத்து 2 வது இடத்தில் 7 கோல்களுடன் நட்சத்திர வீரர் மெஸ்ஸி நூலிழையில் வாய்ப்பை தவறவிட்டார்.

Kylian Mbappe wins World Cup Golden Boot award beating Messi

இதனைத் தொடர்ந்து 3வது இடத்தில் அர்ஜென்டினா வீரர் அல்வாரெஸ், பிரான்ஸ் வீரர் ஆலிவர் ஆகியோர் தலா 4 கோல்கள் அடித்திருந்தனர். போர்ச்சுக்கல் வீரர் ரோமஸ், ஸ்பெயின் வீரர் மொராட்டா, இங்கிலாந்து வீரர் மார்கஸ் ராஷ்போர்ட் ஆகியோர் தலா 3 கோல்களை அடித்தனர்.

சிறந்த கோல் கீப்பர் விருது பைனலில் சிறப்பாக பெனால்டியை காப்பாற்றிய அர்ஜென்டினா வீரர் மார்டினிஸ்க்கு வழங்கப்பட்டது. தங்க கால்பந்து விருது மெஸ்ஸிக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

ஒளிவீசிய பார்வையற்ற மாடல்கள்!

கிச்சன் கீர்த்தனா : சிக்கன் ஸ்பிரிங் ரோல்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share