நடந்து முடிந்த உலகக்கோப்பையில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி வென்றது என்னவோ மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா அணி தான். ஆனால் அதையும் தாண்டி இறுதிப் போட்டி நடந்த அந்த மைதானத்தில் போர் கண்ட சிங்கமாக தன்னுடைய எனர்ஜிடிக் ஆன ஓட்டத்தின் மூலமும் அடுத்தடுத்து ஹாட்ரிக் கோல்கள் அடித்தும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த அந்த 24 வயது இளைஞன் தான் அடுத்த 20 வருடங்களின் கால்பந்தில் நட்சத்திர வீரராக வலம் வர போகிறார் என்று இப்போதே உலக அளவில் பலர் கணிக்க ஆரம்பித்து விட்டனர். யார் அவர்…அவர் தான் பிரான்ஸ் அணி வீரர் கிலியன் எம்பாப்பே.
பிரான்ஸ் நாட்டில் உள்ள பாரிஸில் டிசம்பர் 20 ஆம் தேதி 1998-ல் பிறந்தவர் தான் கிலியன் எம்பாப்பே. இவரது முழு பெயர் கிலியன் எம்பாப்பே லொட்டின். இவருடைய தந்தை கால்பந்து பயிற்சியாளர், அம்மா கைப்பந்து வீராங்கனை.
இவர் பிரான்ஸ் அணியின் ஃபார்வார்டு டிபெண்டர். 6 வயதிலேயே தந்தையின் கால்பந்து அகாடமியில் சேர்ந்த இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு மொனாக்கோ கால்பந்து கிளப்பில் சேர்ந்தார். அங்கு லிகு ஒன் தொடரில் பட்டத்தை வென்றார்.

பிரான்ஸ் அணிக்காக அதிக சம்பளம் வாங்கும் வீரரும் இவர் தான். இவருடைய ஒரு போட்டிக்கான சம்பளம் 185 மில்லியன் அமெரிக்க டாலர். 2017 ஆம் ஆண்டு பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் கிளப் அணிக்காக 180 மில்லியன் யூரோக்களுக்கு ஒப்பந்தமானார். இதன் மூலம் இரண்டாவது மிக உயர்ந்த வீரர் மற்றும் மிகவும் விலையுயர்ந்த டீனேஜ் வீரராக தன்னை மாற்றிக்கொண்டார் கிலியன் எம்பாப்பே.
அந்த அணிக்காக நான்கு லிகு ஒன் பட்டங்களையும் மூன்று கூபேஸ் டி பிரான்ஸ் பட்டத்தையும் வென்றுள்ளார். பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் கிளப்பின் இரண்டாவது அதிக ஆல் டைம் டாப் கோல் அடித்தவரும் இவர் தான். 2020ல் UEFA சாம்பியன்ஸ் லீக் இறுதிபோட்டிக்கு பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் அணியை அழைத்துச் சென்றுள்ளார். அதேபோல் 2017 ஆம் ஆண்டு சர்வதேச அளவில் பிரான்ஸ் அணியில் அறிமுகமானார்.
2018 ஆம் ஆண்டு FIFA உலகக் கோப்பையில் கால்பந்து ஜாம்பவான் பீலேவிற்கு பிறகு இளம் வயதில் கோல் அடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை பெற்றார்.
FIFA உலகக் கோப்பையின் சிறந்த இளம் வீரர் மற்றும் அவரது சிறப்பான ஆட்டத்திற்கான அந்த ஆண்டின் சிறந்த பிரான்ஸ் வீரர் விருதை வென்றார்.

இது தவிர்த்து ஏதேனும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் என்றால் அதற்கு 80 லட்சம் அமெரிக்க டாலர் வாங்குகிறாராம்.இது தவிர, நிக் (நைக்), ஹுப்லாட், இஏ ஸ்போர்ட் ஆகிய நிறுவனங்களின் விளம்பர தூதராகவும் செயல்படுகிறார். இதற்காகவும் அவருக்கு 22 மில்லியன் யூரோ சம்பளமாக கிடைக்கிறது. ரேஞ்ச் ரோவர், ஃபெர்ராரி, மெர்சிடஸ் பென்ஸ், ஆடி மற்றும் பிஎம்டபிள்யூ ஆகிய கார்களை வைத்திருக்கிறார்.
இவருடைய ஜெர்ஸியின் நம்பர் 7.இவர் முதலில் ஏம்மா ஸ்மேட் என்ற நடிகையுடன் டேட்டிங்கில் இருந்துள்ளார்.பிரான்ஸ் நாட்டில் பிரபலமாகி இருக்கும் அந்த நடிகையும் இவரும் அடிக்கடி டேட்டிங் சென்ற போட்டோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
பின்னர் , பிரபல பிளே பாய் நாளிதழின் கவரில் இடம்பிடித்த 32 வயதான ஐனெஸ் ராவு என்ற திருநங்கையுடன் கிலியன் எம்பாப்பே நெறுக்கமாக இருந்த புகைப்படங்கள் வெளியாகி விவாதத்தை ஏற்படுத்தியது. அதுமட்டுமில்லாமல் ஐனெஸ்-க்கு 32 வயது என்பதும் இந்த விவாதத்திற்கு காரணமாக அமைந்தது. தற்போது , விக்டோரியாவின் சீக்ரெட் மாடலான 32 வயதான ஸ்டெல்லா மேக்ஸ்வெல்லுடனும் டேட் செய்துவருகிறார்.

எம்பாப்பே எப்போதும் யூடியூப், இன்ஸ்டாகிராம், ட்விட்டர், ஃபேஸ்புக் ஆகியவற்றில் ஆக்டிவாக இருப்பவர். இன்ஸ்டாகிராம் அக்கவுண்டில் 85.2 மில்லியன் பாலோயர்ஸ் வைத்திருக்கிறார். ஆனால், வெறும் 380 பேரை மட்டுமே பின் தொடர்கிறார். இதே போன்று ட்விட்டரில் 10.4 மில்லியன் பாலோயர்ஸ் வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல், இந்த ஆண்டு நடைபெற்ற FIFA உலகக் கோப்பையில், ஃபிரான்ஸ் இரண்டாம் இடத்தைப் பிடித்தது, எம்பாப்பே இறுதிப் போட்டியில் ஹாட்ரிக் கோல் அடித்தார், போட்டியின் கோல்டன் பூட் மற்றும் சில்வர் பால் ஆகியவற்றை வென்றார், மேலும் உலகக் கோப்பை இறுதிப் போட்டிகளில் எல்லா நேரத்திலும் அதிக கோல் அடித்தவர் ஆனார். இப்படி பல்வேறு சாதனைகளை தன்னுடைய இளம் வயதிலேயே தன் வசப்படுத்தியிருக்கும் கிலியன் எம்பாப்பே -விற்கான வாய்ப்பு கால்பந்து உலகில் பிரகாசமாக இருக்கிறது. கால்பந்து ஜாம்பவன்களான டியாகோ மரடோனா , பீலே , லியோனல் மெஸ்ஸி,கிறிஸ்டியானோ ரொனால்டோ, நெய்மர் போன்றவர்கள் வரிசையில் கிலியன் எம்பாப்பேவின் பெயர் வரும் காலம் வெகு தொலைவில் இல்லை.
மு.வா.ஜெகதீஸ் குமார்