Asia Cup: கும்பிளே, ஜாகீர் சாதனையை முறியடித்த குல்தீப்

Published On:

| By christopher

நடப்பு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக 9 விக்கெட்டுகளை வீழ்த்தி சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் 150 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்துள்ளார் குல்தீப் யாதவ்.

இலங்கை மற்றும் பாகிஸ்தான் இணைந்து 16வது ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரை நடத்தி வருகின்றன.

சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறிய இந்தியா தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொண்டது. மழைக்கு நடுவே இரண்டு நாட்கள் நடைபெற்ற போட்டியில் 228 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இந்தியா.

அதற்கு முக்கிய காரணம் வகித்தவர் இந்திய அணியின் சுழல் மன்னன் குல்தீப் யாதவ். 8 ஓவர்கள் வீசிய அவர், 25 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து,  பாகிஸ்தானின் ஃபக்கர் சமான், அகா சல்மான், இப்திகார் அகமது, ஷதாப் கான் மற்றும் ஃபஹீம் அஷ்ரப் என 5 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றினார்.

அதனைத்தொடர்ந்து இலங்கை அணிக்கு எதிரான  சூப்பர் 4 போட்டியிலும் குல்தீப் யாதவின் சுழற்பந்து வீச்சு எதிரணி வீரர்களை சுழற்றியடித்தது.

இந்த போட்டியில் சதீரா சமரவிக்ரமா, சரித் அசலங்கா, கசுன் ரஜிதா, மதீஷா பதிரனா ஆகியோரது விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

https://x.com/HarshSh52245611/status/1701656070152937621?s=20

இதன் மூலமாக நடப்பு ஆசியக் கோப்பை தொடரில் 3 இன்னிங்ஸ் விளையாடியுள்ள குல்தீப் மொத்தமாக 9 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார்.

இதன்மூலம் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 150 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை குல்தீப் யாதவ் பெற்றுள்ளார்.

மேலும் அதிவேகமாக  150 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய சுழற்பந்துவீச்சாளர் என்ற பெருமையை குல்தீப் யாதவ் பெற்றுள்ளார்.

ஒருநாள் போட்டியில் அதிவேகமாக 150 விக்கெட்டுகளை கைப்பற்றிய இந்திய வீரர்கள்:

  1. முகமது ஷமி – 80 ஒருநாள் போட்டிகள்
  2. குல்தீப் யாதவ் –  88 ஒருநாள் போட்டிகள்
  3. அஜித் அகர்கர் – 97 ஒருநாள் போட்டிகள்
  4. ஜாகீர் கான் – 103 ஒருநாள் போட்டிகள்
  5. அனில் கும்ப்ளே – 106 ஒருநாள் போட்டிகள்
  6. இர்பான் பதான் – 106 ஒருநாள் போட்டிகள்

இதுமட்டுமின்றி ஆசியக் கோப்பை ஒருநாள் தொடர் வரலாற்றில் அதிக விக்கெட் வீழ்த்திய 3வது இந்திய வீரர் என்ற சாதனையை குல்தீப் யாதவ் படைத்துள்ளார்.

ஆசியக் கோப்பை ஒருநாள் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய வீரர்கள்:

  1. ரவீந்திர ஜடேஜா – 17 இன்னிங்ஸ்களில் 24 விக்கெட்டுகள்
  2. இர்பான் பதான் – 12 இன்னிங்சில் 22 விக்கெட்டுகள்
  3. குல்தீப் யாதவ் – 9 இன்னிங்ஸ்களில் 19 விக்கெட்டுகள்
  4. சச்சின் டெண்டுல்கர் – 15 இன்னிங்ஸ்களில் 17 விக்கெட்டுகள்
  5. கபில்தேவ் – 7 இன்னிங்சில் 15 விக்கெட்டுகள்

கிறிஸ்டோபர் ஜெமா

Asia Cup: வரலாற்று சாதனை படைத்த ஜடேஜா

Asia Cup: பைனலில் இந்திய அணியுடன் மோதப்போவது யார்?

Asia Cup: இலங்கைக்கு எதிராக அபார வெற்றி.. பைனலுக்கு முன்னேறிய ‘இந்தியா’

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share