korea open 2023 inadian pair

கொரிய ஓபன்: இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்தியா

விளையாட்டு

கொரிய ஓபன் பேட்மிண்டன் தொடரில் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்திய இணை இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

நடப்பாண்டு கொரிய ஓபன் பேட்மிண்டன் தொடர் யோசு நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து முதல் சுற்றிலேயே தோல்வியுற்று வெளியேறி ஏமாற்றத்தை அளித்தார்.

தொடர்ந்து, எச்.எஸ்.பிரணாய், ரஜாவத் உள்ளிட்ட வீரர்களும் அடுத்தடுத்த சுற்றுகளில் ஆட்டமிழந்து தொடரை விட்டு வெளியேறினர். ஆனால் ஆடவர் இரட்டையர் பிரிவில் களமிறங்கிய சாத்விக் சாய்ராஜ் மற்றும் சிராக் ஷெட்டி இருவரும் தொடக்கம் முதலே சிறப்பாக செயல்பட்டு அரையிறுதிக்கு முன்னேறினர்.

தொடர்ந்து இன்று (ஜூலை 22) நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் சீனாவின் வேய் கெங் லியாங் – சாங் வாங் இணையுடன் மோதியது. ஜின்னாம் மைதானத்தில் 40 நிமிடங்கள் பரபரப்பாக நீடித்த இந்த போட்டியில் இந்திய இணை 21-15, 24-22 என்ற கணக்கில் சீன ஜோடியை வீழ்த்தியது.
சாத்விக் – சிராக் சீன ஜோடியை வெற்றி பெறுவது இதுவே முதல்முறையாகும்.

இதனையடுத்து நாளை நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் சாத்விக் மற்றும் சிராக் இந்தோனேசியா இணையை எதிர்கொள்ள உள்ளனர்.

மோனிஷா

மணிப்பூரைத் தொடர்ந்து மேற்கு வங்கம்…. அரை நிர்வாணமாக அடித்து செல்லப்பட்ட பெண்கள்!

மணிப்பூர் வீடியோ : பெஸ்ட் காவல்நிலையத்துக்கு அருகில் இந்த கொடுமை!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0