ஆர்சிபி அணி ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு வருவதை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விரும்பாது என இந்திய வீரர் வருண் ஆரோன் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் 2024 போட்டிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களில் உள்ள கொல்கத்தா, ஐதராபாத், ராஜஸ்தான், பெங்களூரு அணிகள் ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதிப்பெற்றன.
இந்த நிலையில், ப்ளே ஆப் சுற்றில் நேற்று நடைபெற்ற முதலாவது தகுதிச் சுற்று போட்டியில் ஐதராபாத் அணியை வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்த போட்டியில் தோல்வியடைந்த ஐதராபாத் அணி 2வது தகுதிசுற்றுக்கு முன்னேறியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, இன்று நடைபெறும் எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி 2வது தகுதி சுற்றில் ஐதராபாத் அணியை எதிர்கொள்ளும். இதில் தோல்வியடையும் அணி ஐபிஎல் போட்டியில் இருந்து வெளியேறும்.
இந்நிலையில், ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு பெங்களூரு அணி வரக்கூடாது என கொல்கத்தா அணி விரும்பும் என்று இந்திய கிரிக்கெட் வீரர் வருண் ஆரோன் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் பேசியதாவது, “போட்டியில் கண்டிப்பாக வெற்றி பெறும் அணியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி உள்ளது. இருந்தபோதும், இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விளையாடுவதை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் விரும்ப மாட்டார்கள். ஏனென்றால், ஆர்சிபி அணியிடம் தற்போது ஒரு வேகம் உள்ளது. ஒருவேளை இறுதிப்போட்டிக்கு சென்றால் நம்மால் கோப்பையை வெல்ல முடியும், யாராலும் அதை தடுக்க முடியாது என்ற தன்னம்பிக்கை ஆர்சிபியிடம் உள்ளது.
ஆனால், ஆர்சிபி இறுதிப்போட்டிக்கு செல்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. இறுதிப்போட்டியின் அழுத்தம் வித்தியாசமாக இருக்கும்” என்று வருண் ஆரோன் தெரிவித்துள்ளார்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
நயினார் 4 கோடி விவகாரம்: கேசவ விநாயகன் திடீர் வழக்கு!
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: 6 ஆம் ஆண்டு நினைவு… ஆறாத வடுக்கள்!