2019-க்கு பிறகு சதம் அடித்த கோலி

விளையாட்டு

டெஸ்ட் கிரிக்கெட்டில் 2019-க்கு பிறகு தனது 28-வது சதத்தினை பதிவு செய்தார் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி.

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான தொடர் நடைபெற்று வருகிறது.

நான்கு போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு போட்டிகளை இந்தியாவும், மூன்றாவது போட்டியை ஆஸ்திரேலிய அணியும் வென்றது.

இந்நிலையில், நான்காவது போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி, அபாரமாக 480 ரன்களை விளாசியது.

அதிகபட்சமாக உஸ்மன் கவாஜா 180 ரன்களும், கேமரன் க்ரீன் 114 ரன்களும் எடுத்திருந்தனர். இந்திய அணி சார்பில் கிரிக்கெட் வீரர் அஸ்வின் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் தொடர்ந்து பேட்டிங் செய்த இந்திய அணி விக்கெட்டுகள் இழப்புகள் இன்றி இரண்டாவது நாள் முடிவில் 36 ரன்கள் எடுத்தன.

இதில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 14 ரன்களும், சுப்மன் கில் 18 ரன்களும் எடுத்து களத்தில் நின்றனர்.

மூன்றாவது நாளான நேற்றைய (மார்ச் 11 ) ஆட்டத்தில் ரோகித் சர்மா 35 ரன்களும், சுப்மன் கில் 128 ரன்களும், புஜாரா 42 ரன்களும் எடுத்து மூவரும் ஆட்டம் இழந்தனர்.

இந்திய அணி ஆட்டநேர முடிவில் மூன்று விக்கெட் இழப்புக்கு 289 ரன்கள் எடுத்திருந்தது. களத்தில் இருந்த விராட் கோலி 59 ரன்களும், ஜடேஜா 16 ரன்களும் எடுத்திருந்தனர்.

இந்நிலையில், நான்காவது நாளான இன்று (மார்ச் 12 ) விராட் கோலி நிதானமாக விளையாடி 241 பந்தில் டெஸ்ட் போட்டியில் தனது 28-ஆவது சதத்தை எடுத்தார். இந்த சதம் மூலம் அவர் தனது 75-ஆவது சதத்தை பூர்த்தி செய்தார்.

இதற்கு முன்னர் விராட் கோலி கடந்த நவம்பர் 2019 ஆம் ஆண்டில் தனது கடைசி டெஸ்ட் சதத்தை எடுத்தார்.

விராட் கோலி சில நாட்களாக சரியான ஃபார்மில் இல்லை என கூறப்பட்ட போது, டி20 போட்டியில் சதமடித்து மீண்டும் ஃபார்முக்கு வந்தார்.

மேலும் ஒருநாள் போட்டியிலும் தனது சதத்தை பதிவு செய்தார். அதற்கு பின்னர் வரிசையாக சதமடித்தாலும், டெஸ்ட் போட்டியில் சதம் அடிக்கவில்லை என்றும், விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் கம்பேக் கொடுக்க வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் அவரது சதம் ரசிகர்களை உற்சாகபடுத்தியுள்ளது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

வகுப்பறைகள் எங்கும் வசந்தம் வீச  வேண்டுமா?

பிரசாந்த் கிஷோர் அழுத்தம்: சீமான் மீது வழக்கு!

+1
0
+1
1
+1
0
+1
1
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *