நடப்பாண்டில் ஜனவரி மூன்றாவது வாரத்தில் இந்தியாவுக்கு இங்கிலாந்து அணி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரும் அதனை தொடர்ந்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் இரு அணிகளும் மோத உள்ளன.
ஜனவரி 22 ஆம் தேதி முதல் டி20 போட்டி நடக்கிறது. இந்த இரண்டு தொடர்களுக்கான இங்கிலாந்து அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. இந்த தொடரில் இந்திய வீரர் விராட் கோலி 96 ரன்கள் அடித்தால் புதிய சாதனை படைப்பார்.
தற்போது, விராட் கோலி 14 ஆயிரம் ரன்களை எட்ட 96 ரன்களே தேவைப்படுகிறது. 96 ரன்களை அடித்தால் உலகிலேயே 14 ஆயிரம் ரன்களை விரைவாக கடந்த முதல் வீரர் என்ற சாதனையை படைப்பார். தற்போது 295 இன்னிங்ஸ்களில் விராட் கோலி 13,906 ரன்களை எடுத்துள்ளார்.
எனவே, 300 இன்னிங்ஸ்களுக்குள் 14 ஆயிரம் ரன்களை அவர் அடிக்க வாய்ப்புள்ளது. முன்னதாக , இந்திய ஜாம்பவான் சச்சின் 350 இன்னிங்ஸ்களில் 14 ஆயிரம் ரன்களை எட்டியுள்ளார். இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் குமார சங்கக்காரா 378 இன்னிங்ஸ்களில் 14 ஆயிரம் ரன்களை கடந்து அடுத்த இடத்தில் இருக்கிறார்.
சங்கக்காரா ஒரு நாள் போட்டிகளில் மொத்தம் 14, 243 ரன்களை எடுத்துள்ளார். அடுத்து வரும் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபியில் இந்த ரன்களை கடந்து விராட் கோலி ஒரு நாள் போட்டியில் அதிக ரன்களை குவித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை பெற வாய்ப்புள்ளது.
இந்த தொடரில் இந்திய அணி இலங்கை, பாகிஸ்தான், வங்கதேச அணிகளுடன் லீக் சுற்றில் மோதவுள்ளது. போட்டிகள் அனைத்தும் துபாய் நகரில் நடைபெறும். இந்திய அணி அரையிறுதி, இறுதிப் போட்டிக்கு முன்னேறும் பட்சத்தில் துபாயில் தொடர்ந்து ஆட்டங்கள் நடைபெறும். இல்லையென்றால் இறுதிப் போட்டி பாகிஸ்தானிலுள்ள லாகூரில் நடைபெறும்.
ஒரு நாள் போட்டிகளில் சச்சின் அதிபட்சமாக 18,426 ரன்களை எடுத்துள்ளார். எனவே, சச்சின் சாதனையை எட்டுவது 36 வயது கோலிக்கு சவால்தான்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
குங்பூ பைட்டர், ஃபுட்பால்லர்… நடிகை ஹனிரோஸால் கைதான பாபி செம்மனூர் யார்?
“சரிக்கு சமமா வேட்டியா கட்டுற”… திருச்சி முதியவருக்கு நடுரோட்டில் நடந்த கொடூரம்! வைரலாகும் வீடியோ!