இந்தியாவே வேண்டாம், லண்டன் புறப்படும் விராட் கோலி குடும்பம்… அப்படி என்ன பந்தம்?

Published On:

| By Minnambalam Login1

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி தற்போது ஆஸ்திரேலிய தொடரில் விளையாடி வருகிறார். விரைவில், விராட் கோலி லண்டனில் குடியேற போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

விராட் கோலி டெல்லியில் பிறந்து வளர்ந்தவர். கடந்த 2017-ஆம் ஆண்டு இத்தாலியில் நடந்த திருமண நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவை திருமணம் செய்தார்.

பின்னர், விராட் கோலி மும்பையில் குடியேறினார். இந்த தம்பதிக்கு 2021-ஆம் ஆண்டு வாமிகா என்ற பெண் குழந்தை பிறந்தது. 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் அகே என்ற ஆண் குழந்தை பிறந்தது.

இரண்டாவது குழந்தை லண்டனிலுள்ள விராட் கோலியின் வீட்டில் பிறந்தது. பின்னர், குழந்தையுடன் அனுஷ்கா சர்மா லண்டனில் இருக்க, விராட் கோலி அடிக்கடி இந்தியா வந்து போய் கொண்டிருந்தார்.

இந்த நிலையில், ஓய்வுக்கு பிறகு லண்டனில் நிரந்தரமாக குடியேற விராட் கோலி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

இது குறித்து, விராட் கோலியின் இளம் வயது பயிற்சியாளர் ராஜ்குமார் தைனிக் ஜக்ரான் நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில், விரைவில் விராட் கோலி லண்டனில் குடியேறப் போவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், “ஆஸ்திரேலியா தொடரில் விராட் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

முதல் டெஸ்டில் சதம் அடித்தார். அடுத்த இரு போட்டிகளிலும் கூட, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று நம்புகிறேன்.

அவரின் பார்மில் எந்த சந்தேகமும் இல்லை. இக்கட்டான தருணத்தில் அணியை வெற்றியை நோக்கி அழைத்து செல்லும் திறன் அவருக்கு உள்ளது.

விராட் கோலியின் பிட்னெஸ் அற்புதமாக உள்ளது. இன்னும் 5 ஆண்டுகள் அவர் விளையாடலாம்.

2027 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடர் வரை அவர் விளையாட வாய்ப்புள்ளது. 26 ஆண்டு காலமாக எனக்கு அவரை தெரியும். இன்னும், அவரால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும்” என்றார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….

-எம்.குமரேசன்

வெளியான விடுதலை 2; அடுத்த நிமிடமே நடந்த சம்பவம்!

“ஒன்றிய அரசை பார்த்து கீச்சு குரலில் கூட பேச முடியல” : எடப்பாடியை கிண்டல் செய்த ஸ்டாலின்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share