தொடர்ந்து சொதப்பும் கே.எல்.ராகுல்: கடுமையாக விமர்சித்த இந்திய வீரர்!

விளையாட்டு

இந்திய அணியில் எந்த பார்மேட்டிலும் சரியாக ஆடாத கே. எல் ராகுலை அணியில் இருந்தே நீக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வரும் நிலையில் கே.எல். ராகுலுக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்படுவது குறித்து இந்திய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத் விமர்சனம் செய்துள்ளார்.

இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான பார்டர்-கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ள தொடக்க வீரர் கே.எல்.ராகுல் தொடர்ந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் 115 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு இறங்கிய இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 118 ரன்களை எடுத்து வென்றது. இதன் மூலம் பார்டர் – கவாஸ்கர் கோப்பையை இந்திய அணி தக்க வைத்துள்ளது. இதில் இரண்டாவது இன்னிங்சில் கே.எல் ராகுல் மீண்டும் சொதப்பி வெறும் 1 ரன் மட்டுமே எடுத்தார் .

Indian player who criticized severely

முதல் இன்னிங்சில் 17 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். நாக்பூர் டெஸ்டில் இவர் முதல் இன்னிங்சில் 20 ரன்கள் மட்டுமே எடுத்தார். இந்திய அணியில் எந்த பார்மட்டிலும் சரியாக ஆடாத கே.எல் ராகுலை அணியில் இருந்தே நீக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வலுவாக வைக்கப்பட்டு வருகின்றன. முக்கியமாக இன்றைய மேட்சில் அவர் ஆடிய விதம் கடும் விமர்சனங்களை சந்தித்து உள்ளது. கடந்த 2017ல் இருந்து 49 டெஸ்ட் போட்டிகளில் கே.எல் ராகுல் ஆடி இருக்கிறார். இதில் 25 ஆவரேஜ் மட்டுமே வைத்துள்ளார்

இந்நிலையில், இந்திய அணியில் கே.எல். ராகுலுக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்படுவது குறித்து இந்திய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத் விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “நாட்டில் மிகத்திறமையான பேட்ஸ்மேன்கள் இருந்தபோதும் 2-வது டெஸ்ட் தொடக்க வீரராக அவர் அணி நிர்வாகத்தால் பரீசிலிக்கப்படுகிறார். கேஎல் ராகுலின் திறனை நான் மதிக்கிறேன். ஆனால், அவரின் ஆட்டம் சராசரியை விட குறைவாக உள்ளது என்று கூறியுள்ளார். 8 ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட்டில் 46 டெஸ்ட்கள் விளையாடி 34 ரன்கள் சராசரியாக கொண்டிருப்பது சாதாரணம்.

இதுபோன்று நிறைய வாய்ப்புகள் கொடுக்கப்பட்ட வேறொரு நபரை நான் நினைத்துபார்த்ததில்லை. இவ்வாறான குறைந்த சராசரியுடன் கடந்த 20 ஆண்டுகளில் இந்திய கிரிக்கெட்டில் மேல்வரிசை வீரர்கள் யாரும் விளையாடியதில்லை. இந்திய அணியில் கே.எல். ராகுலுக்கு இடம் கொடுத்திருப்பது நீதி மீதான நம்பிக்கையை அசைக்கிறது என்று கூறியுள்ளார்.

மேலும், கே.எல்.ராகுலுக்கு தனிப்பட்ட முறையில் நான் எதிரானவன் என்று சிலர் நினைக்கிறார்கள். ஆனால் அது அப்படி அல்ல. ராகுல் இங்கிலாந்தில் கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடி, ரன்களை குவித்து, புஜாராவை வீழ்த்தியது போல் மீண்டும் தனது இடத்தைப் பெற வேண்டும். நாட்டிற்காக டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாடுவது மற்றும் ஃபார்மிற்கு திரும்புவதற்கு முடிந்த அனைத்தையும் செய்வது சிறந்த பதிலாக இருக்கும். ஆனால் ஐபிஎல் தொடரை தவிர்க்க முடியுமா?

மு.வா.ஜெகதீஸ் குமார்

ஈரோடு: தினமும் புழங்கும் பத்து கோடி-  பறக்கும்  படையா… பார்க்கும் படையா?

25 K ரன்: சச்சின் சாதனையை முறியடித்த கோலி

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.