IND vs AUS: அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடந்துவரும் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்து வருகிறது இந்தியா.
சுப்மன் கில்(4), ரோகித் சர்மா(47) மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர்(4) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தாலும் விராட் கோலியும், கே.எல்.ராகுலும் அணியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இருவரும் 4வது விக்கெட்டுக்கு 67 ரன்கள் சேர்த்த நிலையில், அரைசதம் கடந்த கோலி 54 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
அதன்பின்னர் வந்த ஜடேஜாவும் 9 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்து அதிர்ச்சி அளித்தார். இதனால் 178 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது இந்தியா.
இதற்கிடையே பொறுமையாக ஆடி கே.எல்.ராகுல் அரைசதம் கடந்து 66 ரன்களுடன் விளையாடி வந்த நிலையில் மிட்செல் ஸ்டார்க் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் இங்கீலிசிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்துள்ளது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.
தற்போது 7வது விக்கெட்டுக்கு சூர்யகுமார் யாதவுடன் ஜோடி சேர்ந்துள்ளார் முகமது ஷமி.
தற்போது 42 ஓவரில் 210 ரன்களை இந்திய அணி கடந்துள்ள நிலையில், கடைசி கட்டத்தில் இந்திய அணி அடிக்கும் ஸ்கோர் தான் வெற்றியை நிர்ணையிக்கும் காரணியாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
INDvsAUSFinal: சாதனை படைத்த கையுடன் ஆட்டமிழந்த கோலி
WorldCupFinal2023: கப்புக்கு அந்த பக்கம் நிக்குறவங்க தான் ஜெயிப்பாங்க… ரசிகர்கள் சண்டை!