இந்தாண்டு மே மாதம் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கடைசி வரை போராடிய ஆர்.சி.பி அணி பிளே ஆஃப் போட்டி வரை சென்று தோல்வியுடன் வெளியேறியது.
அதனைத்தொடர்ந்து அந்த அணியின் கேப்டனாக உள்ள டூ பிளஸியை (வயது 40) மாற்ற வேண்டும் அந்த அணியின் ரசிகர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதனையடுத்து அந்த அணிக்கு புதிய கேப்டனை தேர்வு செய்யும் பணியில் ஆர்.சி.பி அணி நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
இதற்கிடையே லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணியில் விளையாடி வரும் கே.எல்.ராகுலின் கேப்டன்ஸி குறித்து அந்த நிர்வாகம் பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.
ஏற்கெனவே இந்தாண்டு நடைபெற்ற ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியின் போது லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்காவுக்கும், கேப்டன் கே.எல்.ராகுலுக்கும் ஹீட்டான வாக்குவாட்தம் நடைபெற்றது.
இது சமூகவலைதளங்களில் வெளியான நிலையில், அந்த அணியில் இருந்து கே.எல்.ராகுல் வெளியேறி, சஞ்சீவ் போன்ற உரிமையாளர்களின் ஆணவத்தை அடக்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் ஆர்.சி.பி அணியின் புதிய கேப்டனாக கே.எல்.ராகுல் நியமிக்கப்பட உள்ளதாகவும், அதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பெங்களூரு அணிக்காக ஏற்கெனவே 2013 மற்றும் 2016 ஆண்டுகளில் கே.எல்.ராகுல் விளையாடியுள்ளார். இந்தநிலையில் தற்போது வந்துள்ள தகவலின் படி அவர் 3வது முறையாக மீண்டும் ஆர்.சி.பி அணிக்கு திரும்புவார் என கூறப்படுகிறது.
அதே வேளையில் லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணிக்கு நிகோலஸ் பூரனை கேப்டனாக நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கிறிஸ்டோபர் ஜெமா
ஆபரேஷன் ஆம்ஸ்ட்ராங்…. பட்ஜெட் பத்து கோடி! பகீர் தகவல்கள்!
இந்தி திணிப்பை பேசுகிறதா ‘ரகு தாத்தா’? : கீர்த்தி சுரேஷ் பதில்!