3வது டெஸ்ட்: கே.எல். ராகுல் வெளியே… சுப்மன் கில் உள்ளே!

விளையாட்டு

ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக இன்று(மார்ச் 1) நடைபெறும் 3வது டெஸ்ட் போட்டியில் இருந்து இந்திய அணி தரப்பில் கே.எல்.ராகுல் நீக்கப்பட்டு சுப்மன் கில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில் இந்தூர் ஹோல்கர் மைதானத்தில் இன்று நடைபெறும் 3வது டெஸ்ட் போட்டியில் தொடரை வெல்லும் முனைப்புடன் இந்தியா களமிறங்குகிறது.

இதற்கிடையே ஆடும் இந்திய லெவன் அணியில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்திய அணி தனது முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் அபார வெற்றியை பதிவு செய்த போதிலும், தொடக்கவீரரும், துணைக்கேப்டனுமான கே.எல். ராகுல் தொடர்ந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார்.

kl rahul out of playing 11 in 3rd test against australia

கடந்த ஆண்டு ஒரே ஒரு அரைச்சதம் மட்டுமே அடித்திருந்த ராகுல், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2 டெஸ்டில் நடந்த 3 இன்னிங்ஸ்களில் மொத்தம் 38 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தார்.

இதனால் ஆத்திரமடைந்த ரசிகர்கள், ’தொடர்ந்து சொதப்பி வரும் கே.எல்.ராகுலுக்கு ஏன் மீண்டும் மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது? என்று சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வந்தனர்.

இதனையடுத்து அவர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணிக்கான துணை கேப்டன் பொறுப்பிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.

அதன் தொடர்ச்சியாக இன்று தொடங்கியுள்ள 3வது டெஸ்ட் போட்டியின் ஆடும் லெவனில் இருந்தும் கே.எல்.ராகுல் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு பதிலாக சமீபகாலமாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சுப்மன் கில் ஆடும் லெவன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரே கேப்டன் ரோகித் சர்மாவுடன் இணைந்து தொடக்க வீரராக இன்று களமிறங்குகிறார்.

அதேபோல அனுபவ வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமிக்கு ஓய்வளிக்கப்பட்டு, உமேஷ்யாதவ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

கிறிஸ்டோபர் ஜெமா

மஞ்சப்பையில் மரக்கன்று: ஸ்டாலின் கொடுக்கும் பிறந்தநாள் பரிசு!

அண்ணா, கலைஞர், பெரியார் நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.