Video: இந்த பாட்டு போட்டா தான் வருவீங்களா?… தென் ஆப்பிரிக்க வீரரை கலாய்த்த கேப்டன்!

Published On:

| By Manjula

rahul keshav maharaj conversation

இந்தியா – தென் ஆப்பிரிக்கா இடையிலான 3-வது ஒருநாள் போட்டியின் போது கே.எல்.ராகுல், கேசவ் மகாராஜ் இடையே நடந்த ஒரு உரையாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்திய அணி தற்போது தென் ஆப்பிரிக்காவில் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. டி2௦ தொடரை சூர்யகுமார் தலைமையில் இந்திய அணி வென்றது. அடுத்ததாக ஒருநாள் தொடரையும் கே.எல்.ராகுல் தலைமையில் வென்றுள்ளது.

இதன் மூலம் விராட் கோலிக்கு பின்னர் தென் ஆப்பிரிக்காவில் ஒருநாள் தொடரை வென்ற இரண்டாவது கேப்டன் என்ற பெருமை கே.எல்.ராகுலுக்கு கிடைத்துள்ளது.

அதோடு இந்த தொடரில் சாய் சுதர்சன், ரஜத் படிதார் போன்ற இளம் இந்திய வீரர்களும் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று (டிசம்பர் 22)நடந்த 3-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி முதலில் விளையாடி 296 ரன்களை குவித்தது.

தொடர்ந்து சேஸிங் செய்ய களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தோல்வியை நோக்கி பயணிக்க தொடங்கியது.

அந்த அணி 6-வது விக்கெட்டை இழந்த போது, 8-வது வீரராக கேசவ் மஹாராஜ் களமிறங்கினார். அணியின் ஸ்கோர் 177 ஆக இருந்தது. களத்தில் மில்லர் 6 ரன்களுடன் இருக்க, வாஷிங்டன் சுந்தர் 33-வது ஓவரை வீசினார்.

https://twitter.com/on_drive23/status/1737893015879057886

கிரவுண்டில் என்ட்ரி கொடுத்த போது ஆதிபுருஷ் படத்தில் இருந்து ‘ராம் சியா சியாம்’ என்னும் பாடல் பின்னணியில் ஒலித்தது.

இதைக்கேட்ட கேப்டன் ராகுல், கேசவிடம்,”ஒவ்வொரு முறை நீங்கள் வரும் போதும் இந்த பாட்டு போடுகிறார்களே” என்பது போல கிண்டலாக கேட்டார்.

பதிலுக்கு கேசவும் சிரித்துக்கொண்டே ”ஆமாம்” என்பது போல கூற, இருவரும் சிரித்தனர். ஸ்டம்ப்பில் இருந்த மைக் வழியாக இந்த உரையாடல் பதிவாக, ரசிகர்கள் இந்த மகிழ்ச்சியான வீடியோவை சமூக வலைதளங்களில் அதிகமாக பகிர்ந்து வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

-மஞ்சுளா 

10 அடி தண்ணீர்… முதல் மாடியில் 3 நாட்கள்- அமைச்சர் அனிதாவுக்கு நடந்தது என்ன?

நேற்று சாக்‌ஷி… இன்று புனியா: கண்ணீருடன் அடுத்தடுத்து விலகும் மல்யுத்த வீரர்கள்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share