வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று கேப்டன் கே.எல்.ராகுல் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 2-1 என்ற புள்ளி கணக்கில் தோல்வி அடைந்தது.
இதனை தொடர்ந்து, இந்தியா, வங்கதேச அணிகள் மோதும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை வங்கதேசத்தில் உள்ள சட்டகிராமில் துவங்க உள்ளது.
இந்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ரோகித் சர்மா கையில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆடவில்லை. அவருக்கு பதிலாக, அபிமன்யூ ஈஸ்வரன் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் கே.எல் ராகுல் கேப்டனாக இந்திய அணியை வழிநடத்த உள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட் குறித்து கே.எல்.ராகுல் கூறும்போது, “உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற வேண்டும் என்பதால், இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தனது ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தும்.
வங்கதேச அணிக்கு எதிரான ஒவ்வொரு போட்டியிலும் இந்திய அணியின் தேவையை மதிப்பீடு செய்து சிறப்பாக ஆடுவோம். டெஸ்ட் கிரிக்கெட் என்றால் இப்படி தான் விளையாட வேண்டும் என்று எந்த விதிமுறைகளும் இல்லை.
இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியானது சுவாரஸ்யமாக இருந்தது. ஒவ்வொரு அணியும் தங்களுக்கு ஏற்ற விதமான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறது.
சிறப்பாக செயல்படும் அணிகளிடமிருந்து நாம் சிலவற்றை கற்றுக்கொள்கிறோம். ஆனால் நீங்கள் எப்பொழுதும் அதனை பின்பற்ற முடியாது. நிலைமைக்கு ஏற்ப நீங்கள் உங்கள் அணியை மாற்றிக்கொள்ள வேண்டும்.” என்றார்.
செல்வம்
மீண்டும் ரசிகர்களை சந்திக்கும் விஜய்
காட்டாற்று வெள்ளம்: இழுத்து செல்லப்பட்ட பெண்கள்!