ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக 222 ரன்களை குவித்துள்ளது கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி.
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று (ஏப்ரல் 21) நடைபெற்று வரும் 36வது ஐபிஎல் லீக் போட்டியில் கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகள் விளையாடி வருகின்றன.
இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 222 ரன்கள் குவித்துள்ளது.
அந்த அணியின் தொடக்க வீரர்களாக பிலிப் சால்ட் மற்றும் சுனில் நரைன் களம் இறங்கினர். அதிரடியாக ஆடிய பிலிப் சால்ட் 14 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் மொத்தம் 48 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து 10 ரன்களில் நரைன் நடையைக் கட்டினார்.
அடுத்து களமிறங்கிய ரகுவன்ஷி 3 ரன்னிலும், வெங்கடேஷ் அய்யர் 16 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
இதனையடுத்து 5வது விக்கெட்டுக்கு இணைந்த கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் மற்றும் ரிங்கு சிங் ஜோடி பொறுப்பாக ஆடி 40 ரன்கள் குவித்தது.
16 பந்துகளில் 24 ரன்கள் குவித்த ரிங்கு சிங் பெர்குசன் பந்துவீச்சில் பெவிலியன் திரும்பினார்.
விக்கெட்டை பறிகொடுத்தார்.
இவர்களது ஜோடி 56 ரன்களை சேர்த்தது. அப்போது சால்ட் தன்னுடைய விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர் 35 பந்துகளில் பவுண்டரி அடித்து அரைசதம் விளாசிய கையோடு வெளியேறினார் ஸ்ரேயாஸ் அய்யர்.
கடைசி ஓவர்களில் 7வது விக்கெட்டுக்கு இணைந்த சிங் – ஆன்ரே ரஸல் ஜோடி அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்தினர்.
குறிப்பாக 19 வது ஓவர் வீசிய சிராஜ் பவுலிங்கை எதிர்கொண்ட ரமந்தீப், 2 சிக்ஸ் மற்றும் பவுண்டரியுடன் 20 ரன்கள் குவித்தார்.
கடைசி ஓவரில் ரஸ்ஸல் தன் பங்கிற்கு 3 பவுண்டரிகள் விரட்ட, கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 222 ரன்கள் குவித்துள்ளது.
பெங்களூரு அணி தரப்பில் அதிகபட்சமாக கேமரூன் க்ரீன் மற்றும் யாஷ் தயாள் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதனையடுத்து 223 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணி அதிரடியாக விளையாடி வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
உதயசூரியன் நாடு : அரிகாதோ.. சயோனரா..
தமிழ்நாட்டில் 69.72% வாக்குகள் பதிவானதாக அறிவிப்பு!