Andre Russell: 2024 ஐபிஎல் தொடரில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் ஆகிய அணிகள் மோதிக்கொண்ட 3வது லீக் போட்டியில், கொல்கத்தா அணி கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது.
209 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடிய ஐதராபாத் அணிக்கு, ஹெய்ன்ரிச் கிளாசன் அதிரடியாக விளையாடி , 8 சிக்ஸ்களுடன் 29 பந்துகளில் 63 ரன்கள் குவித்தார். இருந்தபோதும் கடைசி ஓவரில் தடுமாறிய அந்த அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோல்வியை சந்தித்தது.
இப்போட்டியில், முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி, ஆரம்பத்தில் தடுமாற்றத்தையே சந்தித்தது. ஆனால், பின்னால் களமிறங்கிய ஆன்ட்ரே ரசல் 25 பந்துகளில் 64 ரன்கள் விளாசி, அந்த அணி 208 ரன்களை எட்ட முக்கிய காரணமாக அமைந்தார்.
இப்போட்டியில், 7 சிக்ஸர்களை விளாசிய ரசல், ஐபிஎல் தொடர்களில் தனது 200வது சிக்ஸரை பூர்த்தி செய்துள்ளார்.
இதன்மூலம் இந்த மெகா சாதனையை எட்டும் 9வது வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
ஐபிஎல் தொடரில் அதிக சிக்ஸர்கள் விளாசிய வீரர்கள் பட்டியல்!
1) கிறிஸ் கெய்ல் – 357
2) ரோகித் சர்மா – 257
3) ஏபி டிவில்லியர்ஸ் – 251
4) எம்.எஸ் தோனி – 239
5) விராட் கோலி – 235
6) டேவிட் வார்னர் – 228
7) கீரோன் பொல்லார்ட் – 223
8) சுரேஷ் ரெய்னா – 203
9) ஆன்ட்ரே ரசல் – 200
இதுமட்டுமின்றி, ஐபிஎல் தொடரில் குறைந்த பந்துகளில் 200 சிக்ஸ்களை விளாசிய வீரர்கள் பட்டியலில், கிறிஸ் கெய்லின் சாதனையை முறியடித்து, ரசல் முதலிடம் பிடித்துள்ளார்.
கிறிஸ் கெய்ல் 1811 பந்துகள் விளையாடி 200 சிக்ஸ்களை பூர்த்தி செய்திருந்த நிலையில், இந்த இமாலய இலக்கை எட்ட 1322 பந்துகள் மட்டுமே எடுத்துக்கொண்டுள்ளார் ரசல்.
ANDRE RUSSELL IS UNSTOPPABLE 🔥🤯pic.twitter.com/5VjFhHOKLY
— Johns. (@CricCrazyJohns) March 23, 2024
குறைந்த பந்துகளில் 200 சிக்ஸ்களை பூர்த்தி செய்த வீரர்கள் பட்டியல்!
1) ஆன்ட்ரே ரசல் – 1322
2) கிறிஸ் கெய்ல் – 1811
3) கீரோன் பொல்லார்ட் – 2055
4) ஏபி டிவில்லியர்ஸ் – 2790
5) எம்.எஸ் தோனி – 3126
ஐபிஎல் தொடர்களில், இதுவரை 97 இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்துள்ள ரசல், 2326 ரன்களை குவித்துள்ளார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 175.55 ஆக உள்ளது. இதன்மூலம், ஐபிஎல் வரலாற்றில் அதிக பேட்டிங் ஸ்ட்ரைக் ரேட் கொண்ட வீரர்கள் பட்டியலில் அவரே முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மகிழ்
திமுக பிரச்சாரத்திற்கு செல்கிறேனா? : சூரி பதில்!
தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் எடப்பாடி