கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் மென்டராகிறாரா டிராவிட்?

விளையாட்டு

2024 டி20 உலகக்கோப்பைக்கு பின், இந்திய ஆடவர் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட்டின் பதவி காலம் நிறைவடைந்த நிலையில், புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீரை பிசிசிஐ நியமித்துள்ளது.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, ஜூலை 27 முதல் 3 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் இந்திய அணி விளையாட உள்ளது. இந்நிலையில், இந்த தொடரில் இருந்தே அவர் தலைமை பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றுக்கொள்ள உள்ளார் என்றும் பிசிசிஐ அறிவித்துள்ளது.

“உங்கள் தேசிய அணிக்கு பயிற்சியளிப்பதை விட பெரிய பெருமை எதுவும் கிடையாது”, என கவுதம் கம்பீருக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வாழ்த்து தெரிவித்துள்ளது.

முன்னதாக, 2024 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு மென்டராக செயல்பட்ட கவுதம் கம்பீர், அந்த அணியை கோப்பையை வெல்லவும் வைத்தார்.

இந்நிலையில், அந்த பொறுப்பில் இருந்து விலகி, இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் இணைந்துள்ள நிலையில், கொல்கத்தா அணியில் ஒரு பெரும் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் மென்டர் பொறுப்புக்காக, அந்த அணியின் நிர்வாகம் ராகுல் டிராவிட்டை தற்போது அணுகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், பல ஐபிஎல் அணிகள் தலைமை பயிற்சியாளர் பொறுப்புக்கு ராகுல் டிராவிட்டை அணுகியுள்ளதாகவும் கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பை ஏற்பதற்கு முன்னதாக, டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றபின், இந்தியா U-19, இந்தியா ஏ அணிகளுக்கு டிராவிட் பயிற்சியாளராக பணியாற்றியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும், தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராகவும் ராகுல் டிராவிட் பணியாற்றியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

– மகிழ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்… வாக்குப்பதிவு விறுவிறுப்பு!

களையிழந்து காணப்படும் ஈரோடு மஞ்சள் மார்க்கெட்: காரணம் என்ன?

ஹெல்த் டிப்ஸ்: இரவு நேர உடற்பயிற்சி ஆரோக்கியமானதா?

பியூட்டி டிப்ஸ்: பருக்கள் மறைய இதைச் செய்யுங்க!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *