Tamil Nadu 2nd spot in Khelo India

Khelo India : இரண்டாம் இடத்திற்கு முன்னேறி தமிழ்நாடு சாதனை!

விளையாட்டு

Tamil Nadu 2nd spot in Khelo India

கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டியில் மொத்தம் 97 பதக்கங்களை வென்று பதக்கப்பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்து தமிழ்நாடு சாதனை படைத்துள்ளது.

சென்னை, திருச்சி, மதுரை,கோவை ஆகிய 4 மாவட்டங்களில் கடந்த 19ஆம் தேதி தொடங்கிய 6-வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதில் ஆரம்பம் முதலே தமிழக வீரர், வீராங்கனைகள் டென்னிஸ், நீச்சல், பளுதூக்குதல், தடகளம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வென்று சாதனை படைத்து வருகின்றனர்.

நேற்றைய 12ஆம் நாள் முடிவில்  பதக்கப் பட்டியலில் 53 தங்கம் உட்பட மொத்தம் 149 பதக்கங்களை குவித்து மகாராஷ்டிரா முதலிடம் பிடித்தது.

35 தங்கம் உட்பட 103 பதக்கங்களுடன் ஹரியானா இரண்டாம் இடத்திலும், அதே 35 தங்கம் உட்பட 91 பதக்கங்களுடன்  தமிழ்நாடு 3-வது இடத்திலும் இருந்தன.

தமிழ்நாடு, ஹரியானா இடையே பதக்கப்பட்டியலில் கடும் போட்டி நிலவிய நிலையில், இறுதி நாளான இன்று பதக்கங்களை குறிவைத்து கால்பந்து, டேபிள் டென்னிஸ், டென்னிஸ் மற்றும் நீச்சல் உள்ளிட்ட 12 போட்டிகள் நடைபெற்றன.

இதில் தமிழ்நாடு வீரர்கள் மூன்று தங்கம் மற்றும் மூன்று வெண்கல பதக்கத்தை கைப்பற்றியுள்ளனர்.

இதுவே முதல் முறை!

இதன்மூலம் தற்போது 38 தங்கம், 20 வெள்ளி மற்றும் 39 வெண்கலம் என பதக்கப்பட்டியலில் 2ஆம் இடத்திற்கு முன்னேறி தமிழ்நாடு புதிய சாதனை படைத்துள்ளது.

கேலோ இந்தியா வரலாற்றில் தமிழ்நாடு அதிக பதக்கங்கள் குவிப்பது இதுவே முதன்முறையாகும். கடந்த ஆண்டு மத்தியபிரதேசத்தில் நடைபெற்ற போட்டியில் தமிழ்நாடு 8ஆவது இடத்தில் இருந்தது.

இதற்கு முன்னர் புனேவில் 2019ஆம் ஆண்டு நடந்த கேலோ இந்தியா இரண்டாவது பதிப்பில்  27 தங்கம் உட்பட தமிழகம் 88 பதக்கங்கள் குவித்ததே அதிகபட்ச சாதனையாக இருந்தது.

கடந்த 13 நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்ற கேலோ இந்தியா போட்டியின் நிறைவு விழா இன்று மாலை 6 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறுகிறது.

இதில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்குர், தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளை வழங்குகிறார்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

உடைந்த ராகுல் கார் கண்ணாடி : நடந்தது என்ன?

கொடநாடு விவகாரம் : எடப்பாடி வைத்த முக்கிய கோரிக்கை!

Tamil Nadu 2nd spot in Khelo India

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0