Key Player Withdraws from Australia

இந்தியாவுக்கு எதிரான டி20 தொடர்: முக்கிய ஆஸ்திரேலிய வீரர் விலகல்!

விளையாட்டு

2023 ஒருநாள் உலகக்கோப்பையை தொடர்ந்து, 2024 டி20 உலகக்கோப்பை தொடருக்கு ஆயத்தம் ஆகும் வகையில், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிக்கொள்ள உள்ளன. Key Player Withdraws from Australia

இந்த தொடர் வரும் நவம்பர் 23 அன்று விசாகப்பட்டினத்தில் துவங்கவுள்ளது.

இந்த தொடரில் பங்கேற்பதற்காக மேத்யூ வேட் தலைமையிலான 15 பேர் கொண்ட அணியை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் முன்னதாகவே அறிவித்திருந்தது.

உலகக்கோப்பை தொடரில் பங்கேற்ற பாட் கம்மின்ஸ், மிட்சல் ஸ்டார்க், ஜோஷ் ஹசல்வுட் உள்ளிட்ட வேகப்பந்து வீச்சாளர்களுக்கு இந்த தொடரில் இருந்து ஓய்வு வழங்கப்பட்டு, பல இளம் வீரர்களுக்கு தொடரில் விளையாட வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் ஆஸ்தான துவக்க ஆட்டக்காரரான டேவிட் வார்னர், இந்த டி20 தொடரில் இருந்து விலகி, நாடு திரும்ப உள்ளதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

மேலும், அவருக்கு மாற்றாக, இளம் ஆல்-ரவுண்டர் ஆரோன் ஹார்டி அணியில் இணையவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

டிராவில் ஹெட், ஸ்டீவ் ஸ்மித், கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஜோஷ் இங்கிலீஷ், ஆடம் ஜாம்பா, சீன் அபூட் ஆகிய வீரர்கள், உலகக்கோப்பை தொடரை தொடர்ந்து இந்தியாவிலேயே இருந்து இந்த டி20 தொடரில் பங்கேற்க உள்ளனர்.

புதிய ஆஸ்திரேலிய அணி: மேத்யூ வேட் (c) (wk), டிராவிஸ் ஹெட், ஸ்டீவ் ஸ்மித், கிளென் மேக்ஸ்வெல், மேட் ஷார்ட், மர்கஸ் ஸ்டோய்னிஸ், டிம் டேவிட், ஜோஷ் இங்கிலிஷ், ஜேசன் பெஹ்ரேன்டோர்ஃப், சீன் அபூட், நாதன் எல்லிஸ், ஸ்பென்சர் ஜான்சன், ஆடம் ஜாம்பா, தன்வீர் சங்கா, ஆரோன் ஹார்டி.

இந்தியா vs ஆஸ்திரேலியா டி20 தொடர் எப்போது?

முதல் போட்டி – நவம்பர் 23 – விசாகப்பட்டினம்

2வது போட்டி – நவம்பர் 26 – திருவனந்தபுரம்

3வது போட்டி – நவம்பர் 28 – குவகாத்தி

4வது போட்டி – டிசம்பர் 1 – ராய்ப்பூர்

5வது போட்டி – டிசம்பர் 3 – பெங்களூரு

முன்னதாக, இந்த தொடரில் இருந்து, விராட் கோலி, ரோகித் சர்மா, ஜஸ்பிரீத் பும்ரா உள்ளிட்ட அனைத்து சீனியர் வீரர்களுக்கும் ஓய்வு அளித்து, சூர்யகுமார் யாதவ் தலைமையிலான ஒரு இளம் இந்திய அணியை பிசிசிஐ அறிவித்திருந்தது.

இந்திய அணி: சூர்யகுமார் யாதவ் (C), ருதுராஜ் கெய்க்வாத் (VC), இஷான் கிஷன், யசஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ரின்கு சிங், ஜிதேஷ் சர்மா (WK), வாஷிங்டன் சுந்தர், அக்சர் பட்டேல், ஷிவம் துபே, ரவி பிஸ்னாய், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, அவேஷ் கான், முகேஷ் குமார்.

கடைசி 2 போட்டிகளில், ஷ்ரேயஸ் அய்யர் துணை கேப்டனாக அணியில் இணையவுள்ளார். Key Player Withdraws from Australia

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

நடிகர் சங்கத்திற்கு 4 மணி நேரம் அவகாசம்: மன்சூர் அலிகான் எச்சரிக்கை!

தெலங்கானா தேர்தல்: காங்கிரஸ் கட்சிக்கு திமுக ஆதரவு!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *