கேரள மாநிலம் பனூரில் பாஜகவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் போர்ச்சுகல் நாட்டுக் கொடியை எஸ்டிபிஐ கட்சிக் கொடி என நினைத்து கிழித்த சம்பவம் இணையத்தில் அதிகமாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
கால்பந்து போட்டியை மிகவும் கொண்டாடும் கேரளாவிற்கு ஃபிஃபா உலகக் கோப்பை என்பது முக்கியமான போட்டியாகும். இதனை முன்னிட்டு கேரளா முழுவதும் சாலைகள், மின்கம்பங்கள், வீடுகளில் கால்பந்து வீரர்கள் போட்டோக்கள் மற்றும் கொடிகள் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
இது ஒருபுறம் இருக்க, மறுபுறம் சூடான கால்பந்து விவாதங்கள், இடைவிடாத ஆரவாரங்கள், விரும்பத்தகாத சில சம்பவங்கள் கேரளாவில் அரங்கேறி வருகின்றன.

அந்தவகையில், கடந்த நவம்பர் 15-ஆம் தேதி தீபக் இளங்கட் என்ற பாஜகவைச் சேர்ந்த இளைஞர், போர்ச்சுகல் கால்பந்து அணி ரசிகர்களால் அந்தப் பகுதியில் வைக்கப்பட்டிருந்த கொடியை கிழித்து சாலையில் எறிந்துள்ளார்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலானது. கிறிஸ்டியோனா ரொனால்டாவின் அணியை விரும்பாததால் அவர் போர்ச்சுகல் கொடிகளை அகற்றவில்லை.
இந்தியாவில் தடை செய்யப்பட்ட பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் அரசியல் பிரிவான எஸ்டிபிஐ கட்சியின் கொடி என்று நினைத்து அந்த நபர் போர்ச்சுகல் கொடியை அகற்றியுள்ளார்.

போர்ச்சுகல் நாட்டு கொடியானது எஸ்டிபிஐ கட்சி கொடியுடன் சார்ந்திருந்ததால் அவர் கொடிகளை கிழித்தெறிந்துள்ளார். இரண்டு கொடிகளும் பச்சை மற்றும் சிவப்பு நிறத்தில் இருக்கும்
சம்பவம் குறித்து தகவல் அறிந்த வந்த கிறிஸ்டியோனா ரொனோல்டா ரசிகர்கள் அந்த நபரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் ஆத்திரமடைந்த போர்ச்சுகல் ரசிகர்கள், தீபக் இளங்கட்டை சரமாரியாக தாக்கினர். சம்பவ இடத்திற்கு வந்த பாகனூர் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
பொதுச்சொத்துகளுக்கு சேதம் விளைவித்ததாக பாஜகவைச் சேர்ந்த தீபக் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் தற்போது இணையத்தில் அதிக விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
செல்வம்
நாட்டில் 50 தரமற்ற மருந்துகள்: ஆய்வில் தகவல்!
மங்களூரு ஆட்டோ குண்டு வெடிப்பு: விசாரிக்கிறது கோவை தனிப்படை!