ஐபிஎல் ஏலம் : டிரெண்டிங் குயினாக மாறிய காவியா மாறன்

விளையாட்டு

கிரிக்கெட்டை ஒரு மதமாக கருதும் இந்தியாவில் சம்மர் வெகேசனில் ஆறு முதல் 60 வயதினருக்கும் பிசிசிஐயால் கொடுக்கப்படும் செம ட்ரீட் தான் ஐபிஎல் போட்டிகள்.

கிரிக்கெட் ரசிகர்களை தாண்டி அனைவரும் விடாமல் பார்க்க வேண்டும் என்று நினைப்பதற்கு காரணம், ஊர்களின் பெயர் கொண்ட 10 அணிகள் விளையாடப்படக்கூடிய அனல் பறக்கும் ஆட்டங்கள் அந்தந்த ஊர்களின் மைதானத்திலே நடைபெறும் என்பது தான்.

2023 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகளின் பேச்சு இப்போதே பரபரப்பை எட்டியிருக்கிறது. இதற்கான மினிஏலமானது டிசம்பர் 23ஆம் தேதி கேரள மாநிலம் கொச்சியில் உள்ள கிராண்ட் ஹயாத் ஹோட்டலில் ஹியூக் எட்மிடஸ் தலைமையில் நடைபெற்றது.

கிட்டத்தட்ட 10 அணிகளும் தங்களுக்கான வீரர்களை தேர்ந்தெடுக்கும் வேகத்தில் ஏலத்தில் ஈடுபட்டு வர , எப்போதும் ஆக்டிவ்வாக இருக்கும் நெட்டிசன்கள் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியினரையும் , அணியின் சி.இ.ஓ வாக இருக்க கூடிய காவியா மாறன் மீதும் தன் பார்வையை வைத்திருந்தனர்.

தமிழகத்தின் மிக முக்கியமான சன் டிவி குழுமத்தின் நிறுவனர் கலாநிதிமாறனின் மகள். இவர் ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் பிகாம் பட்டத்தையும், நியூயார்க்கில் இருக்கும் லியோனார்டு என் ஸ்டெர்ன் ஸ்கூல் ஆஃப் பிசினஸ் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ பட்டத்தையும் முடித்துள்ளார்.

அதன் பின்பு தனது தந்தையின் நிறுவனத்தில் சன் மியூசிக் மற்றும் எஃப்.எம்களை கவனித்து வருகிறார். இருந்தாலும் 2020ஆம் ஆண்டிலிருந்து ஐபிஎல் போட்டிகளிலும் ஏலங்களிலும் அதிகம் பார்க்கப்பட்ட ஒரு இளம் சி.இ.ஓ வாக வலம் வருகிறார் காவியா மாறன்.

2008 லிருந்து ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வந்தாலும், சன் ரைசர்ஸ் ஹைதரபாத் அணியானது 2012 ஆம் ஆண்டில் தான் நிறுவப்பட்டது. அதுவரை இருந்த டெக்கான் சார்ஜஸ் அணியானது சில பண-திவால் பிரச்சினைகளால் கலைக்கப்பட்டது. அதற்கு பதிலாக உருவான சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியானது 2013 ஆம் ஆண்டு தான் முதன்முதலாக தங்களுடைய டெப்யூ மேட்ச் ஐபிஎல் ஆடினார்கள்.

அப்போது இருந்து சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது ஆண்டுதோறும் தங்களின் தவிர்க்க முடியாத சிறப்பான ஆட்டத்தை ரசிகர்களுக்காக தந்து வருகிறார்கள்.குறிப்பாக சொல்லப்போனால் 2018ஆம் ஆண்டு வரை தவிர்க்க முடியாத மிகச்சிறந்த அணியாகவும் இருந்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்.

அதன் பின்னர் பல சரிவு மேடுகளை பார்த்து வருகிறது இந்த அணி. இதன் காரணமாக நிர்வாக அணியில் சில மாற்றங்கள் வந்து, இந்த அணியில் யார் இருக்க வேண்டும்? யாரை வெளியே அனுப்ப வேண்டும் என்ற முக்கிய முடிவுகளை எடுக்கும் இடத்திற்கு வந்தார் காவியா மாறன். அந்த அணிக்கான சி.இ.ஓ வாகவும் ஆகிறார்.

2018 ல் இருந்து தான் காவியா மாறன் நேரடியாக சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக அனைத்து விதமான நிர்வாக வேலைகளிலும் இறங்க ஆரம்பிக்கிறார். அதிலும் முதன் முதலாக 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மெகா ஆக்சனுக்காக வந்திருந்த போது தான் முதன்முதலாக காவியா மாறனின் மீது மீடியாவின் கேமராக்கள் திரும்ப ஆரம்பித்தன.

2012ஆம் ஆண்டிலிருந்து பஞ்சாப் அணியின் கோ ஃபவுண்டராக இருக்கும் இந்திய நடிகை ப்ரீத்தி ஜிந்தா தான் ஆக்சன் நடைபெறும் இடங்களின் ஹைலெட்டாக இருப்பார். பிரீத்தி ஜிந்தாவின் முகத்தை தான் நாம் அதிகமாக ஏலம் நடைபெறும் இடங்களில் பார்த்திருப்போம்.

kavya maran be a trending queen in ipl auction 2023

அதன் பின்பு சில பல காரணங்களால் பிரீத்தியால் வர முடியாமல் போனதும் , அதன் பின்பு ஆக்சனுக்கு வரும் ஒரே ஒரு இளம் பெண்ணாக அறியப்பட்டார் காவியா மாறன்.
அதுவரை கேமிராக்கள் நடிகை பிரீத்தி ஜிந்தாவை மட்டுமே காண்பித்து வந்த நிலையில், அடுத்ததாய் கேமிராக்களுக்கு பிடித்த முகமாக மாறிப்போகிறார் காவியா மாறன்.

அதன் பின்னர் ஐபிஎல் நடக்கும் எல்லா மைதானங்களிலும் அணியினருக்காக வருவதும் , மைதானத்தில் நடக்கும் கிரிக்கெட் ஆட்டத்திற்கு ஏற்றவாறு மாறும் காவியாவின் ரியாக்சன்கள் இணையத்தில் மிகப்பெரிய அளவில் ட்ரெண்டாவதும் வழக்கம் தான்.

ஆனால் இடையில் சில விமர்சனங்களுக்கும் உள்ளானார் காவியா. அணியின் வீரர்களை சரியாக நடத்த தெரியவில்லை என்றும , அணியின் வீரர்கள் சரியாக ஆடவில்லை என்றால் துச்சமாக நடத்துகிறார் என்றும் சொல்லப்பட்டது.

கிரிக்கெட்டே தெரியாத இவர் எதற்காக எங்களை இப்படி நடத்துகிறார் என்று சில வீரர்கள் பிசிசிஐ நிர்வாகத்தினரிடம் புகாரும் கொடுத்திருக்கின்றனர்.

ஆனால் இதற்கெல்லாம் இடம் கொடுக்காத காவியா மாறன் தனக்கான அணியான சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திற்காக நிறைய முன்னெடுப்புகளை எடுத்து வந்தார்.

2020 ஆம் ஆண்டு போட்டிகள் கொரோனா காரணமாக துபாயில் நடைபெற்றது. அந்த ஆண்டு அணியின் கேப்டனாக டேவிட் வார்னர் இருக்க வேண்டும் என்று வாண்டடாக முடிவை எடுத்தார் காவியா. எப்படியோ அணியானது இறுதிப்போட்டிக்கு முன்னதான குவாலிஃபைர் 2 சுற்று வரைப் போயிருந்தது.

அதன்படி ஷேக் சையத் மைதானத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கும் டெல்லி கேப்பிடல்ஸ்க்கும் இடையே குவாலிஃபையர் 2வது சுற்று நடைபெற்றது. அதில் சன்ரைசர்ஸ் தோற்றுப்போனதும் காவியா மாறன் அய்யோ என்று ரியாக்ட் செய்திருப்பார். அந்த ரியாக்சன் தான் இன்று வரை ஹைலெட்டான ரியாக்சனாக இருந்து வருகிறது.

kavya maran be a trending queen in ipl auction 2023

அடுத்த ஆண்டு வெற்றி கை நழுவிப்போனதை எப்படியாவது பிடிக்க வேண்டும் என்று கேப்டனை மாற்றினார். கேன் வில்லியன்சனை கேப்டனாக்கினார். ஆனால் அந்த ஆண்டு குவாலிஃபையருக்கு கூட வராமல் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் தோற்றுபோய் வெளியேறியது.

அதன் பின்னர் 2022 ஆம் ஆண்டும் கேன் வில்லியம்சன் தலைமையில் தான் ஐபிஎல் தொடரை சந்தித்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத். அந்த ஆண்டு நன்றாக ஆடினாலும் பஞ்சாப் அணியிடம் தோற்று ஆட்டத்தை விட்டு குவாலிஃபைர் போக முடியாமல் வெளியேறியது.

இப்படியாக கடைசி வரை போராடி தோற்பதை விரும்பாத சி.இ.ஓ இந்தாண்டு தேவையான வீர்ர்களை மிகச்சரியாய் தேர்ந்தெடுக்க சில மெனக்கெடல்களை செய்திருக்கிறார்.

அந்த வகையில் இந்த ஆண்டு துவக்கத்தில் 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மெகா ஏலம் நடந்த போது வீரர்களை பார்த்து பார்த்து தன் அணிக்காக எடுத்திருக்கிறார் காவியா மாறன். அன்றைய நாளில் ஆக்சனை விட அதிகபட்சமாய் பேசப்பட்டது காவியா மாறனைப் பற்றித்தான்.

காரணம் இதற்கு முன்னதாக இருந்த பஞ்சாப் அணியின் கோ ஃபவுண்டர் பிரீத்தா ஜிந்தாவாக இருக்கட்டும், மும்பை இந்தியன்ஸ் நீத்தா அம்பானியாக இருக்கட்டும், இருவருமே ஏலம் எடுக்கும் அணியின் பேனலில் இருப்பார்களே தவிர கைதூக்கி ஏலத்தில் ஈடுபடமாட்டார்கள். ஆனால் காவியா மாறன் முழு வீச்சோடு வீரர்களை தேர்ந்தெடுத்தார்.

இதைப் போலவே டிசம்பர் 23ஆம் தேதி நடைபெற்ற ஏலத்திலும் வீரர்களை தேர்ந்தெடுப்பதில் மிக துல்லியமாக தேர்ந்தெடுத்தார் காவியா. இங்கிலாந்து வீரர்களை எடுக்க போட்டா போட்டி போட்ட சமயத்தில், ஹாரி ப்ரூக்கை எடுத்த உடனேயே குடுத்த ரியாக்சன் இன்னும் ட்ரெண்டாகி வருகிறது.

பின்னர் அவர் தேர்ந்தெடுத்திருக்கும் அணியில் மயங்க் அகர்வால், புவனேஷ்வர் குமார் , அடில் ரஷித், க்ளேன் பிலிஃப்ஸ் மற்றும் நடராஜன் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த அணியின் ஆட்டம் எப்படி இருக்கும், கோப்பையை வெல்லுமா?? என்பதெல்லாம் தெரியாத விசயமாக இருந்தாலும் ,மீண்டும் காவியாவின் ரியாக்சன் டாப் ட்ரெண்டிங்கில் வரும் என்பதை மட்டும் உறுதியாக சொல்லலாம்.

பவித்ரா பாலசுப்பிரமணியன்

“சி.வி.சண்முகம் இதோட நிறுத்திக்கிட்டா நல்லது” – அமைச்சர் பொன்முடி எச்சரிக்கை!

அரங்கில் நுழைந்ததும் விஜய் செய்த சம்பவம்… ரசிகர்கள் நெகிழ்ச்சி!

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *