தோனிக்கு இவ்வளவு பெரிய ரசிகர் கூட்டமா? மிரண்டு போன லக்னோ கோச்!

விளையாட்டு

நடப்பு ஐபிஎல் சீசன் தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நாளை (மே 26) நடைபெறும் இறுதிப்போட்டியில், கொல்கத்தா – ஹைதராபாத் அணிகள் மோத உள்ளன.

இந்த தொடரில் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல், சென்னை அணி வெளியேறியது. சென்னை அணி ரசிகர்கள் தோனியை ஹீரோவாக கொண்டாடுவதாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லேங்கர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிபிசி ஸ்போர்ட்ஸ் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், “நடப்பு ஐபிஎல் சீசன் தொடரில் சிஎஸ்கே அணிக்கு எதிராக இரண்டு ஆட்டங்களில் லக்னோ ஆடியுள்ளது.

லக்னோவில் உள்ள ஏக்னா மைதானத்தில் முதல் போட்டி நடைபெற்றது. இங்கு 50 ஆயிரம் இருக்கைகள் உள்ளன. அதில் 48 ஆயிரம் இருக்கைகளில் தோனியின் 7-ஆம் நம்பர் ஜெர்ஸி அணிந்து சிஎஸ்கே ரசிகர்கள் அமர்ந்திருந்தனர். என்னால் இதை நம்பவே முடியவில்லை.

பின்னர் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் போட்டி நடைபெற்றது. இதில் 100 சதவிகித இருக்கைகளிலும் தோனியின் 7-ஆம் நம்பர் ஜெர்ஸி அணிந்து ரசிகர்கள் அமர்ந்திருந்தனர்.

தோனியின் பணிவு எனக்கு மிகவும் பிடிக்கும். மைதானத்தில் அவர் நுழைந்தததும் நிதானமாக விளையாடுகிறார்” என்று ஜஸ்டின் லேங்கர் தெரிவித்துள்ளார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

போக்குவரத்து Vs போலீஸ் பிரச்சனைக்கு தீர்வு எப்போது? எடப்பாடி காட்டம்!

“அம்மா சொன்ன அந்த வார்த்தை” – ஐதராபாத் கேப்டன் கம்மின்ஸ் எமோஷனல்!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0