junior wrestlers protest in Delhi
|

டெல்லியில் ஜூனியர் மல்யுத்த வீரர்கள் போராட்டம்!

junior wrestlers protest in Delhi

டெல்லி ஜந்தர் மந்தரில் ஜூனியர் மல்யுத்த வீரர்கள் இன்று (ஜனவரி 3) போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக இருந்த பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்து மல்யுத்த வீரர்கள் போராட்டம் நடத்தினர். மல்யுத்த வீரர்களுக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு அளித்தனர்.

கடந்த ஓராண்டாக நீடித்த போராட்டத்தின் விளைவாக கடந்த டிசம்பர் 24 ஆம் தேதி இந்திய மல்யுத்த சம்மேளனத்தை சஸ்பெண்ட் செய்து மத்திய அரசு உத்தரவிட்டது.

தொடர்ந்து இந்திய மல்யுத்த கூட்டமைப்பை நிர்வகிப்பதற்காகத் தற்காலிக குழுவை இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பு நிர்ணயித்தது.

இந்நிலையில் மல்யுத்த வீரர்கள் சாக்‌ஷி மாலிக், பஜ்ரங் புனியா, வினேஷ் போகட் ஆகியோருக்கு எதிராக,

உத்தரப்பிரதேசம், ஹரியானா மற்றும் டெல்லியின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இளம் மல்யுத்த வீரர்கள் இன்று போராட்டம் நடத்தி வருகின்றனர்.

குறிப்பாக சப்ராலி, பாக்பத்தில் உள்ள ஆர்ய சமாஜ் அகாரா மற்றும் நரேலாவில் உள்ள வீரேந்தர் மல்யுத்த அகாடமியிலிருந்து பேருந்துகளில் வந்த 300க்கும் மேற்பட்ட இளம் மல்யுத்த வீரர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

junior wrestlers protest

போராட்டத்தில் ஈடுபட்ட இளம் வீரர்கள் கைகளில் ‘சர்வதேச மல்யுத்த கூட்டமைப்பே… எங்களை இந்த மூன்று வீரர்களிடமிருந்து காப்பாற்றுங்கள்’,

என்ற புகைப்படம் மற்றும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தியுள்ளனர்.

இளம் மல்யுத்த வீரர்கள் கடந்த ஒரு வருடமாக நிறுத்தப்பட்ட பயிற்சி மற்றும் போட்டிகளுக்கு சாக்‌ஷி மாலிக், பஜ்ரங் புனியா மற்றும் வினேஷ் பாகட் தான் பொறுப்பு என்றும் தெரிவித்துள்ளனர்.

சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள மல்யுத்த சம்மேளனத்தை மீட்டெடுக்க வேண்டும் என்றும் தற்போது நியமிக்கப்பட்டுள்ள தற்காலிக குழுவை கலைக்க வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளம் வீரர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

junior wrestlers protest

கடந்த ஆண்டு ஜனவரியில் இந்திய மல்யுத்த சம்மேளனத்திற்கு எதிராக போராட்டம் நடைபெற்ற அதே இடத்தில் தற்போது இளம் மல்யுத்த வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மோனிஷா

Video: ‘போனதெல்லாம் போகட்டும்’ ரசிகையுடன் நடனமாடி மகிழ்ந்த அஜித்!

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை : உச்ச நீதிமன்றத்தில் பொன்முடி மேல்முறையீடு!

junior wrestlers protest in Delhi

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts