நடந்து முடிந்த 16 வது ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய மதீஷ பதிரானா இலங்கை அணியின் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அறிமுகமாகிறார்.
ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணி மோதும் ஒரு நாள் கிரிக்கெட் தொடர் நாளை (ஜூன் 2) மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் தொடங்க உள்ளது.
இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சிறப்பாக விளையாடி டெத் ஓவரில்( கடைசி மூன்று ஓவர்கள்) கலக்கிய பதிரானா அறிமுகமாக உள்ளார். இவர் ஏற்கனவே கடந்த ஆண்டு இலங்கை டி20 அணியில் இடம்பிடித்துவிட்டார்.
மொத்தம் 12 ஆட்டங்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக பந்துவீசிய பதிரானா 19 விக்கெட்டுகளை சாய்த்தார். எதிரணியின் ரன் வேகத்துக்கும் முட்டுக்கட்டைப் போட்டார். இலங்கை முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா ஸ்டைலில் ஓடிவந்து சிறப்பாக யார்க்கர் பந்துவீசக் கூடிய பதிரானாவை சென்னை அணியின் கேப்டன் எம்.எஸ். தோனி எல்லா ஆட்டங்களிலும் ஊக்கப்படுத்தினார்.
இந்நிலையில், இவரின் ஐபிஎல் ஆட்டங்களை பார்த்த இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் இவருக்கு இந்த வாய்ப்பை வழங்கியுள்ளது.
இந்த போட்டி நாளை காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது. இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் ஜூன் 4ஆம் தேதியும், மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி ஜூன் 7ம் தேதியும் நடைபெறுகிறது. ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் நெருங்கி வரும் நிலையில் இந்தத் தொடர் இலங்கைக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இலங்கை அணி ஐசிசி தரவரிசையில் 9வது இடத்தில் இருப்பதால் உலகக் கோப்பைக்கு இன்னும் தகுதி பெறவில்லை. ஜிம்பாப்வேயில் விரைவில் நடைபெறவுள்ள தகுதிச்சுற்றுப் போட்டியில் இலங்கை விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
அமமுக செயற்குழு கூட்டம் தேதி மாற்றம்: டிடிவி தினகரன் அறிவிப்பு!
”செந்தில்பாலாஜியை கைது பண்ணனும்”: பிரேமலதா