பங்கை கரெக்ட்டா பிரிக்கணும்… அஸ்வின் – ஜடேஜாவின் வைரல் ரீல்ஸ்!
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களான அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோரின் வீடியோ ஒன்று தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.
2023 பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 2 – 1 என்ற கணக்கில் இந்திய அணி வென்றுள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த ஆஸ்திரேலிய அணி 480 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கவாஜா 180 ரன்களை குவித்தார் .
இதனை தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியும் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தியது. கில் 118 ரன்கள் எடுக்க, கோலி 186 ரன்கள் குவித்து அசத்தினார். இதனால் இந்திய அணி 571 எடுத்திருந்தது.
இதனையடுத்து 91 ரன்கள் முன்னிலை பெற்றிருந்த இந்திய அணியை சேஸ் செய்தது ஆஸ்திரேலிய அணி. இருப்பினும் கடைசி நாளில் அந்த அணி 175 ரன்கள் எடுக்க மேட்ச் டிரா ஆனது இந்த போட்டியில் விராட் கோலி ஆட்டநாயகன் விருது பெற்றார். தொடர் நாயகர்களாக அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்நிலையில் , இந்த விருதை ஒன்றாக வென்றதற்காக இருவருக்கும் பரிசுத் தொகை கொடுக்கப்பட்டது. அதை எப்படி பிரித்துக் கொள்வது என்பதை போட்டி முடிந்த பின் உடை மாற்றும் அறையில் இருவரும் சேர்ந்து நடிகர் அக்சய் குமாரின் ‘ஏக் தேரா ஏக் மேரா’ வசனத்தை மையப்படுத்தி நகைச்சுவையாக வீடியோவாக எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்கள்.
அதில் “ஒன்று எனக்கு இரண்டு உனக்கு மூன்று எனக்கு” என பளு தூக்கும் இரும்பு உருண்டைகளை அஷ்வினுக்கு சரி சமமாக பிரித்துக் கொடுக்கும் ஜடேஜா “50 – 50, கணக்கு சரியாக இருக்கிறதா, குழப்பம் இல்லையே, மகிழ்ச்சியா” என்று கேட்கிறார்.
அதற்கு குழந்தையைப் போல் மிகவும் மகிழ்ச்சியாக அஷ்வின் தலையசைத்து ரியாக்சன் கொடுக்கிறார். இறுதியில் இருவரும் பிரபல ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் வரும் ’நாட்டு நாட்டு’ பாடலுக்கு தோள் மீது கை போட்டு பரிசு தொகையுடன் நடனமாடுவது போல் அந்த வீடியோ முடிவடைகிறது.
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
ஆர்.ஆர்.ஆர்-ஐ பின்பற்றுங்கள்: சேலம் எஸ்பியின் ஆர்டர் வைரல்!