WWE மல்யுத்தப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ஜான்சீனா அறிவித்துள்ளார்.
WWE மல்யுத்த போட்டிகளில் கவனம் ஈர்த்தவர்களில் குறிப்பிடத்தக்கவர் ஜான்சீனா. மல்யுத்த போட்டி நடைபெறும் களத்திற்குள் ஜான்சீனா கொடுக்கும் எண்ட்ரி மிகவும் பிரபலமானதாகும்.
16 முறை WWE சாம்பியன் பட்டத்தை ஜான்சீனா வென்றுள்ளார். இந்நிலையில், கனடா நாட்டின் டொரொண்டோவில் நடைபெற்ற “மணி இன் தி பேங்க் (Money in the Bank)” என்ற போட்டியில் ஜான்சீனா கலந்து கொண்டார்.
அப்போது, “2025ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ராயல் ரம்பிள், எலிமினேஷன் சேம்பர் மற்றும் ரெஸில்மேனியா 41 ஆகிய போட்டிகளில் போட்டியிடவுள்ளேன்.
அதன்பிறகு WWE மல்யுத்தப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற போகிறேன்” என ஜான்சீனா அறிவித்துள்ளார். ஜான்சீனா மல்யுத்த போட்டிகளில் மட்டுமின்றி பல ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஆன்லைனில் பட்டா, சிட்டா புல எல்லை வரைபடத்தை பதிவிறக்கம் செய்யலாம் : தமிழக அரசு
எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வீடு உள்ளிட்ட 9 இடங்களில் சிபிசிஐடி சோதனை!