நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் சீசனை ஆன்லைனில் நேரடி ஒளிபரப்பும் உரிமம் பெற்றுள்ள ஜியோ சினிமா முதல் போட்டியிலேயே தடுமாறுவதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் புலம்பி வருகின்றனர்.
இந்தாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் இன்று (மார்ச் 31) தொடங்கியுள்ளது. தற்போது நடைபெற்று வரும் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.
இந்நிலையில் இந்த ஆட்டத்தை ஆவலுடன் காண காத்திருந்த ரசிகர்களை விரக்தி அடைய செய்துள்ளது ஜியோ சினிமா.
இந்தாண்டு முதல் 2027-ம் ஆண்டு வரை 5 ஆண்டுகளுக்கான ஐபிஎல் போட்டிகள் ஒளிபரப்பும் டிஜிட்டல் உரிமத்தை ரூ.20,500 கோடிக்கு ரிலையன்ஸின் வியாகாம் 18 நிறுவனம் ஏலம் எடுத்தது.
இதனையடுத்து ரசிகர்களை கவரும் விதமாக நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை ஜியோ சினிமாவில் இலவசமாக பார்க்க முடியும் என்று அறிவித்துள்ளது.
மேலும் தமிழ் உட்பட 12 மொழிகளில் வர்ணனை, 4K ரெசல்யூஷனில் நேரலை என பல்வேறு வசதிகளுடன் போட்டிகள் ஸ்ட்ரீம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் குஜராத் மற்றும் சென்னை அணிகள் இடையேயான முதல் ஆட்டத்தை ஆன்லைனில் தெளிவாக பார்க்க முடியவில்லை என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.
ஜியோ சினிமா செயலியில் போட்டியை லைவ் ஸ்ட்ரீமிங்கில் பார்க்க முடியவில்லை என்றும், மிக மெதுவாக செயல்படுகிறது என்றும் ரசிகர்கள் ட்விட் செய்து வருகின்றனர்.
இதனையடுத்து ட்விட்டரில் #JioCrash என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.
கிறிஸ்டோபர் ஜெமா
பொதுச்செயலாளர் எடப்பாடி: தேர்தல் ஆணையத்தில் ஆவணங்கள்!
குட்டி ரசிகைக்கு கியூட் சர்ப்ரைஸ் கொடுத்த நடிகர் விஜய்