என்னோட ஆசை அவங்க ஜெயிக்க கூடாது அவ்ளோ தான்: ஜெயவர்தனே அதிரடி கருத்து!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா அணி வெல்வதை விரும்புவதாக முன்னாள் இலங்கை வீரர் மகிளா ஜெயவர்தனே தன்னுடைய விருப்பத்தை தெரிவித்துள்ளார்.
பிப்ரவரி 9ஆம் தேதி பார்டர் – கவாஸ்கர் கோப்பை நடைபெறுகிறது. ஜூலை மாதம் லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெறும் அணிகளை பார்டர் – கவாஸ்கர் கோப்பை தீர்மானிக்க உள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா தோற்றால் மட்டுமே டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு செல்வதற்கான வாய்ப்பு இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு உள்ளது.
ஆனால் 2014க்குப்பின் அனைத்து பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடர்களையும் தொடர்ச்சியாக வென்று வரும் இந்தியா 2018/19, 2020/21ஆகிய அடுத்தடுத்த வருடங்களில் ஆஸ்திரேலியாவை முதல் முறையாக அதன் சொந்த மண்ணில் தோற்கடித்து கோப்பைகளை வென்றது.
இந்நிலையில், இலங்கையைச் சேர்ந்தவர் என்ற முறையில் இத்தொடரில் 2 – 1என்ற கணக்கில் ஆஸ்திரேலியா வெல்வதை விரும்புவதாக முன்னாள் வீரர் மகிளா ஜெயவர்தனே வெளிப்படையாக பேசியுள்ளார்.
ஆனால் அது கடினம் என்பது தமக்கு தெரியும் என்று தெரிவிக்கும் அவர் இதுபற்றி ஐசிசி இணையத்தில் பேசியதாவது:
“இத்தொடரின் முடிவை கணிப்பது கடினமாகும். இருப்பினும் இலங்கையைச் சேர்ந்தவனாக ஆஸ்திரேலியா வெல்லும் என்று நம்புகிறேன். குறிப்பாக 2 – 1என்ற கணக்கில் ஆஸ்திரேலியா வெல்லும்.
ஆனால் அது மிகவும் கடினமாக இருக்கப் போகிறது. எப்படி பார்த்தாலும் இது மிகச்சிறந்த தொடராக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
ஆஸ்திரேலியா நல்ல பந்துவீச்சு கூட்டணியை கொண்டிருப்பதால் இந்திய சூழ்நிலைகளில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் இந்திய பவுலர்களை எவ்வாறு எதிர்கொள்கிறார்கள் என்பதை பொறுத்தே இத்தொடரின் வெற்றி அமையலாம்.
அத்துடன் இத்தொடரை இரு அணிகளும் எவ்வாறு ஆரம்பிக்கின்றன என்பதை பொறுத்தும் வெற்றியாளர் அமையலாம். மொத்தத்தில் இது மிகச்சிறந்த தொடராக அமையப் போகிறது” என்று கூறியுள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
துருக்கி நிலநடுக்கம் : அமெரிக்கா விடுத்த பயங்கர எச்சரிக்கை!
வார் ரூம் ரகசியங்கள்: அமர் பிரசாத்துக்கு எதிராக மாரிதாஸ்