கிரிக்கெட் உலகில் இந்தாண்டு முக்கியமான ஆசியக் கோப்பை, உலகக்கோப்பை போட்டிகள் என சர்வதேச தொடர்கள் நடைபெற உள்ளன.
இந்நிலையில் தான் 2023 -24 ஆம் ஆண்டிற்கான ஆசிய கிரிக்கெட் கவுன்சில் சார்பில் நடத்தப்படும் போட்டிகளின் விவரங்களை பிசிசிஐ மற்றும் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவருமான ஜெய் ஷா இன்று (ஜனவரி 5) வெளியிட்டுள்ளார்.
அதன்படி, ஐசிசி 50 ஓவர் உலகக்கோப்பை போட்டிக்கு முன்னதாக வரும் செப்டம்பர் மாதம் 50 ஓவர் ஆசியக் கோப்பை தொடர் நடைபெற உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 2022ம் ஆண்டை போலவே இந்த ஆண்டும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஒரே குரூப்பில் இடம்பெற்றுள்ளன. கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக இருதரப்பு தொடர்கள் இல்லாமல் ஐசிசி நடத்தும் சர்வதேச தொடர்களில் மட்டுமே இந்தியா பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன.

இந்நிலையில் எனவே, இரு அணிகளும் வரும் ஆசியக் கோப்பை தொடரில் நேருக்கு நேர் மோதவுள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆவலை தூண்டியுள்ளது.
எனினும் இந்திய அணி ஆசியக் கோப்பையில் விளையாடப் பாகிஸ்தான் செல்லாது என ஜெய் ஷா கடந்த அக்டோபர் மாதம் அறிவித்தது பரபரப்பை ஏற்படுத்தினார்.
அதற்கு பதிலடியாக இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் விளையாடப் பாகிஸ்தான் அணி இந்திய வராது எனப் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது ஜெய் ஷா வெளியிட்டுள்ள பட்டியலில் கூட போட்டி நடைபெறும் இடங்கள் குறித்த தகவல்கள் இடம்பெறவில்லை.
இதனால் இந்த ஆண்டு நடைபெற இருக்கும் ஆசியக் கோப்பை வழக்கம்போல பொதுவான ஒரு இடத்தில் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மோனிஷா
விதிமீறலால் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டதா?: நடிகர் கிஷோர்
எம்எல்ஏ திருமகன் சிதைக்கு தீ மூட்டிய மகள்: கதறி அழுத அமைச்சர்!