ஒரே ஆண்டில் 71 விக்கெட்டுகள் : கிரிக்கெட் ஆஸ்திரேலிய உத்தேச அணியின் கேப்டனாக பும்ரா தேர்வு!

Published On:

| By Kumaresan M

ஐசிசி தரவரிசையில் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 907 புள்ளிகளை பெற்று நம்பர் 1 இடத்தை தக்க வைத்துள்ளார்.

147 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், இதுவரை எந்த இந்திய வேகப்பந்து பவுலரும் 907 புள்ளிகளை பெற்றதே கிடையாது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னதாக இந்திய முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் 904 புள்ளிகளை பெற்று நம்பர் முதலிடத்தை பிடித்திருந்தார். இதுவே, அதிகபட்ச புள்ளிகளாக இருந்தது.

2024 ஆம் ஆண்டு 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள பும்ரா 71 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். சராசரி 14.92 ஆகும். 30.16 பந்துகளுக்கு ஒரு விக்கெட்டை அவர் எடுத்துள்ளார். தற்போது, ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் டெஸ்ட் தொடரில் 4 போட்டிகளில் பும்ரா 30 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார்.

முன்னதாக கடந்த 2008 ஆம் ஆண்டு தென்னாப்ரிக்க வீரர் டேல் ஸ்டெயின் ஆண்டுக்கு 74 விக்கெட்டுகள் எடுத்ததே சாதனையாக இருந்தது. அதற்கும் முன், பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இம்ரான்கான் 62 விக்கெட்டுகளை அவுட் ஆக்கியிருந்தது சாதனையாக பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், கிரிக்கெட் ஆஸ்திலியா அணி வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த ஆண்டுக்கான கிரிக்கெட் ஆஸ்திரேலிய உத்தேச அணியின் கேப்டனாக பும்ரா தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. பேட் கம்மின்ஸ் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

அதே போல இந்திய அணியின் மற்றொரு இளம் வீரர் ஜெய்ஷ்வால் இந்த அணியின் ஓப்பனராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். நடப்பாண்டில் 29 இன்னிங்ஸ்களில் இவர் 1478 ரன்களை அடித்துள்ளார். இதில், 3 சதங்களும் 9 அரை சதங்களும் அடங்கும்.

இவர்கள் தவிர, ஆஸ்ரேலிய வீரர்கள் அலெக்ஸ் கேரி, ஜாஸ் ஹேஸில்வுட், இங்கிலாந்து வீரர்கள் பென் டக்கெட், ஜோ ரூட், ஹரி ப்ரூக், நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திரா, மேட் ஹென்ரி, இலங்கையின் மகிந்து மெண்டிஸ் மற்றும் தென்னாப்ரிக்காவின் கேசவ் மகராஜ் ஆகியோர் இந்த அணியில் இடம் பெற்றுள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

அம்மாவின் அரவணைப்பு-  அமிர்த ஆசிரமத்தில் அண்ணாமலை

நடிகர் மாதவன் வாங்கிய 14 கோடி படகு: நயன்தாரா துபாய் சென்றது ஏன்?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share