ஆசிய சாம்பியன்ஸ் டிராபியில் கொரியாவை 3-5 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஜப்பான் அணி வெண்கல பதக்கத்தை தட்டிச் சென்றுள்ளது.
சென்னையில் நடந்து வரும் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி இன்று (ஆகஸ்ட் 12_ இறுதி நாளை எட்டியுள்ளது. எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் மாலை 7 மணிக்கு தொடங்கிய மூன்றாவது இடத்துக்கான போட்டியில் நடப்பு சாம்பியன் தென் கொரியா அணியும், ஜப்பான் அணியும் மோதின.
போட்டி தொடங்கியதில் இருந்து இரு அணி வீரர்களும் அதிரடியான ஆட்டத்தை வெளிபடுத்திய நிலையில், முதல் பத்து நிமிடங்களிலேயே ஜப்பானின் ரியோமா (3) மற்றும் ரியோசை(9) ஆகியோர் அடுத்தடுத்து கோல் அடித்து அசத்தினர்.
பதிலுக்கு கொரியாவின் ஜங் ஜோங்கோயின்(15) மற்றும் பார்க் செயோலின்(26) இருவரும் கோல் அடித்து பதிலடி கொடுத்து சமன் செய்தனர்.
எனினும் முதல் பாதியின் இறுதியில் புகுண்டோ கென் டரோ(28) கோல் அடித்து ஜப்பானை 3-2 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற செய்தார்.
தொடர்ந்து இரண்டாம் பாதி தொடங்கிய சில நிமிடங்களில் கொரிய அணிக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைக்க, அதனை அட்டகாசமான முறையில் பயன்படுத்தி கொரியாவின் ஜங் ஜோங்கோயின்(33) மீண்டும் கோலடிக்க ஆட்டம் மீண்டும் சமன் பெற்றது.
மேலும் மூன்றாம் சுற்றில் ஜப்பானின் தாக்குதல் ஆட்டம் கொரியாவின் தற்காப்பினால் தவிடு பொடியானது. இதனால் போட்டி டிரா ஆகும் என்ற சூழ்நிலை நிலவியது.
இந்த நிலையில் கடைசி 15 நிமிடங்களில் தங்களது தாக்குதல் ஆட்டத்தை ஜப்பான் அணி தீவிரப்படுத்தியது.
அதன் விளைவாக, யமண்டா சோட்டா(53) மற்றும் நாகயோஷி கென்(56) அடுத்தடுத்து கோல் அடிக்க கடைசி நேரத்தில் ஜப்பான் அணி கோல் அடிக்க, தென் கொரிய வீர்ர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
Chennai appreciates Japan for clinching Bronze in the Hero Asian Champion Trophy Chennai 2023 against Korea.#HockeyIndia #IndiaKaGame #HACT2023 pic.twitter.com/az8C9QXuqh
— Hockey India (@TheHockeyIndia) August 12, 2023
2 கோல்கள் வித்தியாசத்தில் பெற்ற வெற்றியுடன் ஜப்பான் அணி 3வது இடத்துடன் வெண்கல பதக்கத்தை வென்றுள்ளது.
தோல்வியை தழுவிய நடப்பு சாம்பியன் தென் கொரியா 4வது இடத்துடன் தொடரை நிறைவு செய்துள்ளன.
இதனைத்தொடர்ந்து தற்போது நடந்து வரும் பரபரப்பான இறுதி ஆட்டத்தில் மலேசிய அணியுடன் விளையாடி வரும் இந்திய அணி 1-2 என்ற கோல் கணக்கில் பின்தங்கியுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
மாணவர் வெட்டப்பட்டதை நேரில் கண்ட உறவினர் மரணம்: நிவாரணம் அறிவிப்பு!
மதுரை அதிமுக மாநாடு: முக்குலத்து அமைப்புகள் எதிர்ப்பு!