பிசிசிஐ தலைவராக இருந்த ஜெய்ஷா சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் எனப்படும் ஐசிசி தலைவராகியுள்ளார்.
நியூசிலாந்தை சேர்ந்த கிரேக் பார்க்லே ஐ.சி.சியின் தலைவராக இருந்தார். இவரின் பதவிக்காலம் நவம்பர் மாதத்துடன் முடிவுக்கு வருகிறது.
இதனையடுத்து அடுத்த தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான பணியில் ஐ.சி.சி இறங்கியது.
தலைவரை தேர்ந்தெடுக்க ஐ.சி.சி சில நடைமுறைகள் உள்ளன. 17 பேர் கொண்ட ஐ.சி.சியின் இயக்குனர் குழு உறுப்பினர்கள்தான் அடுத்த தலைவராகத் தகுதியடையவர்களை முன்மொழிய வேண்டும்.
அப்படி, முன்மொழியும் நபர்களுக்கிடையே நடத்தப்படும் தேர்தலில் 51% வாக்குகளைப் பெறும் நபர் வெற்றியாளர்.
தற்போது, 17 நபர்கள் கொண்ட இயக்குனர் குழுவில் இப்போது ஒரு உறுப்பினர் பதவி காலியாக இருக்கிறது. இந்த 16 பேரில் பெரும்பான்மையான நபர்கள் ஜெய் ஷா தான் அடுத்த தலைவராக வர வேண்டும் என்று முன்மொழிந்துள்ளனர். மேலும், ஜெய் ஷாவை தவிர அவர்கள் வேறு யாரையும் முன்மொழியவில்லை.
இதனால் போட்டியே இல்லாமல் ஜெய் ஷா ஐ.சி.சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
டிசம்பர் 1 ஆம் தேதியிலிருந்து ஐசிசி தலைவர் பொறுப்பில் ஜெய்ஷா அமருவார். தற்போது, 35 வயதாகும் ஜெய் ஷா, ஐசிசிக்கு தேர்வு செய்யப்பட்ட முதல் இளம் வயது தலைவர் ஆவார்.
ஐ.சி.சி யின் வருமானத்தில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய நாடுகளின் போர்டுகளின் பங்களிப்புதான் அதிகம். அதிலும் இந்தியாவின் பங்களிப்புதான் ஏராளமாக உள்ளது. அதற்கு கிரிக்கெட் ஆட்டத்துக்கு இங்கிருக்கும் மிகப்பெரிய சந்தை முக்கிய காரணம்.
தற்போது, ஐ.பி.எல். வேறு மிகப் பெரிய சந்தையாக மாறியுள்ளது. அதனால்தான் ஐ.சி.சி யே பல சமயங்களில் பாரபட்சமாக இந்தியாவுக்கு சாதகமாக நடந்துகொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்படும். எனவேதான் ஜெய்ஷா எந்த போட்டியும் இல்லாமல் தேர்வு செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
பணம் தராமல் அலைக்கழிப்பு : PVR நிறுவனத்துக்கு எதிராக திரும்பும் விநியோகஸ்தர்கள்!
மலையாள நடிகைகளின் பாலியல் குற்றச்சாட்டுகள் : “No என்றால் No தான்”…குஷ்பு பதிவு!