இந்தாண்டு நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா அணியை வழிநடத்தும் கேப்டன் யார் என்பதை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா மறைமுகமாக தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு நடந்த ஒருநாள் உலகக்கோப்பைத் தொடரில் இந்திய அணி இறுதிபோட்டியில் தோல்வி அடைந்து 12 ஆண்டுகளுக்கு பிறகு ஐசிசி கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்தது.
மேலும் சீனியர் வீரர்களான கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும், இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும் விதமாக டி20யில் விலகுவார்களா என்ற கேள்வி அடிக்கடி எழுந்து வருகிறது.
மேலும் இந்திய அணியின் டி20 கேப்டன் பதவிக்கான போட்டியில் ரோகித்துடன் ஹர்திக் பாண்டியா மற்றும் சூர்யகுமார் யாதவ் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
ரோகித் தான் கேப்டன்!
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா பேசுகையில், “இந்திய அணி ஒருநாள் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் தோல்வியடைந்திருக்கலாம். ஆனால் நாங்கள் தொடர்ந்து 10 போட்டிகளில் வெற்றி பெற்று ரசிகர்களின் இதயங்களை வென்றோம்.
வரும் ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தான் வெல்லும்” என்று தெரிவித்தார்.
இதன்மூலம் வரும் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா என்பதை ஜெய் ஷா உறுதி செய்துள்ளார்.
2022 டி20 உலகக் கோப்பையின் அரையிறுதி தோல்விக்கு பின்னர் ரோஹித் டி20யில் விளையாடவில்லை.
ஆனால் கடந்த மாதம் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் டக் அவுட் ஆனாலும், கடைசி மற்றும் 3வது போட்டியில் ரோஹித் தனது 5வது டி20 சதத்தை அடித்து அசத்தினார்.
அதே வேளையில் இந்தியாவின் நட்சத்திர வீரர் விராட் கோலியும் வரும் டி20 உலகக்கோப்பை தொடரில் முக்கிய பங்கு வகிப்பார் என்று ஜெய் ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
டி20 உலகக்கோப்பை! Captain of T20 WorldCup 2024
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் வரும் ஜூன் 1 முதல் 29 வரை 2024 டி20 உலகக் கோப்பை தொடரானது நடைபெற உள்ளது.
2024 டி20 உலகக் கோப்பையில் இந்தியாவின் அட்டவணை :
இந்தியா vs அயர்லாந்து – ஜூன் 5 நியூயார்க்
இந்தியா vs பாகிஸ்தான் – ஜூன் 9 நியூயார்க்
இந்தியா vs அமெரிக்கா – ஜூன் 12 நியூயார்க்
இந்தியா vs கனடா – ஜூன் 15 புளோரிடா
இறுதிப்போட்டி – ஜூன் 29 பார்படாஸ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
அண்ணே மோடி எந்த நாட்டுக்கு பிரதமரு : அப்டேட் குமாரு
பாஜகவுக்கு போகும் காங்கிரஸ் எம்எல்ஏ : காரணம் என்ன?
Captain of T20 WorldCup 2024