ஜடேஜா இந்திய அணிக்கு தேவையா? : சுனில் கவாஸ்கர் பதிலடி!

விளையாட்டு

நட்சத்திர வீரர் ரவீந்திர ஜடேஜா இந்திய அணிக்கு தேவையா என்பது குறித்து முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் பேசியுள்ளார்.

2024 டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி போட்டிகள் நாளை (ஜூன் 27) நடைபெற உள்ளன. இதன் 2வது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்த்து இந்திய அணி களமிறங்க உள்ளது.

முன்னதாக 2022ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதியில் இங்கிலாந்து அணியிடன் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியடைந்தது. மேலும், தொடரை விட்டு வெளியேறியது.

இதன் காரணமாக, தற்போது நடைபெற உள்ள போட்டியில் இங்கிலாந்து அணியிடம், இந்திய அணி எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், இந்திய அணியில் சில மாற்றங்கள் செய்ய வேண்டும் என்றும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அதிலும் குறிப்பாக இந்திய அணியில் நட்சத்திர ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவை நீக்கினால் கூடுதலாக ஒரு பேட்ஸ்மேனை சேர்க்கலாம் என்ற பேச்சுகளும் எழுந்துள்ளது.

ஏனெனில், நடந்து வரும் டி20 உலகக்கோப்பை தொடரில் மொத்தமாக ஜடேஜா 10 ஓவர்களை வீசி ஒரு விக்கெட்டையும், 3 இன்னிங்ஸ் பேட்டிங் செய்து 16 ரன்களையும் மட்டுமே எடுத்துள்ளார்.

ஜடேஜாவை ஒப்பிடும்போது அக்சர் படேல் மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரும் சிறப்பான பங்களிப்பை இந்திய அணிக்கு இதுவரை வழங்கி உள்ளனர். குறிப்பாக, ஹர்திக் பாண்டியா கிட்டதட்ட இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங்கிற்கு சமமான பங்களிப்பை தற்போது அளித்து வருகிறார்.

இந்நிலையில், ரவீந்திர ஜடேஜா குறித்து இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் பேசியதாவது, “ஜடேஜாவின் பேட்டிங் மற்றும் பவுலிங் ஃபார்ம் குறித்து எந்த கவலையும் இல்லை. ஏனெனில் ஜடேஜா சிறந்த அனுபவசாலி.

அவர் முந்தைய போட்டிகளில் கிடைத்த சின்ன சின்ன வாய்ப்புகளையும் சிறப்பாக செயல்படுத்தி உள்ளார். அதுமட்டுமின்றி ஃபீல்டிங்கில் மட்டும் 20 முதல் 30 ரன்களை தடுத்து நிறுத்தி இருக்கிறார் என்பதை யாரும் மறக்க வேண்டாம்.

ஜடேஜாவின் ஃபீல்டிங் மற்றும் கேட்ச் பிடிக்கும் திறனை யாராலும் புறந்தள்ளிவிட முடியாது. அவரின் ஃபீல்டிங் மூலம் 30 ரன்களை தடுத்துள்ள நிலையில், அவரின் பேட்டிங் மற்றும் பவுலிங் பங்களிப்புகள் இந்திய அணிக்கு கூடுதல் பலத்தை கொடுக்கும். இதனால் ஜடேஜாவின் பங்களிப்பு குறித்து யாரும் சிந்திக்க தேவையில்லை” என சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.

இந்து

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கூட்டத்தொடர் முழுவதும் அதிமுகவினர் சஸ்பெண்ட் : அப்பாவு உத்தரவு!

சரிவில் தங்கம், வெள்ளி விலை! : மக்கள் மகிழ்ச்சி!

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
1