jadeja rahul ruled out
இங்கிலாந்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இருந்து கே.எல்.ராகுல், ஜடேஜா இருவரும் விலகியுள்ளனர்.
இங்கிலாந்து அணி தற்போது இந்தியாவில் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. ஹைதராபாத்தில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி எதிர்பாராத விதமாக 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதனால் தற்போது 1-௦ என்ற கணக்கில் இங்கிலாந்து அணி இந்த டெஸ்ட் தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. இதன் காரணமாக இந்தியா 2-வது டெஸ்டில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
முன்னதாக கோலி முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகுவதாக அறிவித்து இருந்தார். இந்தநிலையில் காயம் காரணமாக கே.எல்.ராகுல், ஜடேஜா இருவரும் இரண்டாவது டெஸ்டில் இருந்து விலகியுள்ளனர்.
முதல் டெஸ்டில் தோல்வியை தழுவியதற்கு கோலி இல்லாதது தான் காரணம் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.
தற்போது அனுபவம் வாய்ந்த ராகுல், ஜடேஜாவும் விலகி இருப்பதால் இந்திய அணிக்கு இது பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
என்றாலும் இதிலும் ஒரு நல்ல விஷயமாக, டெஸ்ட் அணியில் நீண்ட நாட்களாக வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வந்த குட்டி சிங்கம் சர்ஃபராஸ் கானுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
ரஞ்சி உள்பட உள்நாட்டு தொடர்களில் தொடர்ந்து ரன்களை வேட்டையாடி வந்த சர்ஃபராஸ் கானுக்கு, இந்திய அணி வாய்ப்பு கொடுக்காதது குறித்து நீண்ட நாட்களாகவே விமர்சகர்கள், ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்து வந்தனர்.
அவரது உடல் எடையை வைத்தும் கிண்டல்கள் எழுந்தன. ஆனால் எதையும் கண்டு கொள்ளாமல் தொடர்ந்து நன்றாக விளையாடுவதில் சர்ஃபராஸ் கவனம் செலுத்தி வந்தார்.
தற்போது அதற்கு கைமேல் பலனாக இந்திய அணியின் டெஸ்ட் கதவுகள் அவருக்கு திறந்துள்ளன. இதேபோல மற்றொரு மாற்று வீரராக சவுரப் குமார் அறிவிக்கப்பட்டு இருக்கிறார்.
இருவரும் கிடைத்த வாய்ப்பினை இறுகப்பற்றிக் கொள்வார்களா? என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இந்தியா-இங்கிலாந்து இடையிலான 2-வது டெஸ்ட் வருகின்ற பிப்ரவரி 2-ம் தேதி விசாகப்பட்டினத்தில் தொடங்குகிறது. இதில் இந்தியா வெற்றி பெற்று இங்கிலாந்திற்கு தக்க பதிலடி கொடுக்குமா? என்பதை நாம் பொறுத்திருந்து பார்க்கலாம்.
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ராணுவத்தினரிடம் குறைந்து வரும் ஃபிட்னஸ் : அதிரடி கொள்கை அறிவிப்பு!
மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல் தேதி வெளியானது!
jadeja rahul ruled out